எண்ணெய், 1எம்டிபி சர்ச்சை காரணமாக ரிங்கிட்டில் படுமோசமான வீழ்ச்சி

ringgitமலேசிய  ரிங்கிட்    மிக  மோசமான   வாராந்திர- வீழ்ச்சியை   நோக்கிச்   சென்று  கொண்டிருக்கிறது. இது  கடந்த   10  மாதங்களில்  ஏற்பட்டிராத   மோசமான  வீழ்ச்சி   எனக்  கூறும்   புளூம்பர்க்,  கச்சா   எண்ணெய்  விலை    குறைந்திருப்பதும்    1எம்டிபி   தொடர்பில்   வெளிவந்து    கொண்டிருக்கும்   சர்ச்சைக்குரிய   தகவல்களுமே    இதற்குக்   காரணம்   என்றது.

பிரெண்ட்  கச்சா  எண்ணெய்   விலை  கடந்த   ஐந்து   நாள்களில்   2.8விழுக்காடு   வீழ்ச்சி    கண்டது    எண்ணெய்  ஏற்றுமதி   நாடுகளின்   வருமானத்தைப்   பாதித்துள்ளது.

மற்றொரு   புறம்   சிங்கப்பூரிலும்   அமெரிக்காவிலும்    1எம்டிபி-இல்   முறைகேடுகள்   நிகழ்ந்திருப்பதாகக்   கூறி    அதனுடன்   தொடர்புகொண்ட  சொத்துக்களைப்  பறிமுதல்   செய்யும்   நடவடிக்கைகள்    தொடங்கப்பட்டிருக்கின்றன.

1எம்டிபி-இன்  ஆகக்  கடைசி   நிலவரங்கள்   1997-க்குப்   பிறகு   ரிங்கிட்    காணவுள்ள   மிகப்   பெரிய   வீழ்ச்சிக்   காரணமாக     அமையக்கூடும்    என  புளூம்பெர்க்   கூறிற்று.