1எம்டிபி விவகாரம்மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு ஒரு வாரக் கெடு

deadlineடிஏபி   எம்பி   லிம்   லிப்  எங்   அமெரிக்க    நீதித்துறை(டிஓஜே)   தொடுத்துள்ள   1எம்டிபி  தொடர்பான   சிவில்   வழக்கில்   பெயர்  குறிப்பிடப்பட்டவர்களுக்கு   எதிராக    போலீசில்   புகார்   செய்துள்ளார்.

“டிஓஜே-யும்  எப்பிஐ (அமெரிக்கப்  புலனாய்வுப்  பிரிவு)-யும்   யாரைக்  குறிப்பிட்டிருக்கின்றவோ   அவர்கள்மீது ,   குறிப்பாக     பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்கின்   மாற்றான்  மகன்   ரிஸா   அசீஸ்,  (தொழில் அதிபர்)  ஜோலா   லோ,     மலேசிய அதிகாரி   1,   ஆகியோர்மீது,     போலீஸ்   விசாரணை   செய்ய    வேண்டும்.

“1எம்டிபி-இலிருந்து   திருடப்பட்டதாக  எப்பிஐ    கூறியுள்ள  யுஎஸ்$3.5  மில்லியன்   எங்கே   போனது    என்பதையும்   போலீஸ்   கண்டறிய   வேண்டும்”,  என   லிம்,    டாங்  வாங்கி   போலீஸ்  மாவட்ட   தலைமையகத்தில்   புகார்  கொடுத்த   பின்னர்   செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.

தம்  புகாரின்மீது    விசாரணையைத்    தொடங்குவதற்கு    போலீஸ்   படைத்   தலைவர்   காலிட்  அபு   பக்காருக்கு   ஒரு   வாரகாலம்    அவகாசம்   அளிப்பதாகவும்   அவர்  சொன்னார்.

ஒரு  வாரத்துக்குள்   விசாரணையைத்    தொடங்காவிட்டால்   பக்கத்தான்   ஹராபானும்   பல்வேறு    என்ஜிஓ-களும்   “கடும்   நடவடிக்கையில்   இறங்கும்”  என்றார்.