பேங்க் நெகாரா முன்னாள் ஆளுனர் ஸெட்டி அக்தார் அசீஸ், பணி ஓய்வு பெறவுள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த் தலைவர் அபு காசிம் முகம்மட் , முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல் ஆகியோருக்கு எதிராக அம்னோ இளைஞர் பகுதி போலீஸ் புகார் ஒன்றைச் செய்துள்ளது.
அம்மூவரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கவிழ்க்கும் சதித்திட்டம் ஒன்றில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக அம்னோ இளைஞர் உதவித் தலைவர் கைருல் அஸ்வான் ஹருன் கூறினார்.
கைருல் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் அவர்களுக்கு எதிராக புகார் செய்தார்.
அம்மூவரும் இரகசிய தகவல்களை அனுமதியின்றி அமெரிக்க புலனாய்வு பிரிவு (எப்பிஐ) உள்பட பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பதாய் சந்தேகிக்கப்படுவதாக அவர் அப்புகாரில் கூறியுள்ளார்.
அடாடா! இது தேச நிந்தனை ஆயிற்றே! அம்னோ இளைஞர் பகுதியினருக்கு இவ்வளவு தெரிந்தும் வாய்மூடி இருந்ததும் தேசத் துரோகம்! அவர்கள் மீதும் நடவடிக்கை தேவை!
புலி சிங்கம் வாயில் கை வைத்தால் அவை கடிக்கும் என்பதைக் கூட அறியாத அறிவிலிகளா இந்த இளைஞர் படை!
புடிச்சி ஜெயிலுள்ள போடுங்க சார் …… (அன்று துரோகத்துக்கு துணை போனதுக்கு இதுதான் நல்ல பாடம்…. ). புடிச்சி ஜெயிலுள்ள போடுங்க சார். என்ன என்ன சட்டம் இருக்கோ, அதுலலாம் கேச போட்டு “வாயை மூடி கிட்டு இருந்ததிற்கு” நன்றியை தெரிவியுங்கள் சார் ….