பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அரசாங்கத்தையும் கவிழ்க்கும் உயர்-மட்ட சதித் திட்டம் பற்றி புகார் செய்துள்ள அம்னோ இளைஞர் உதவித் தலைவர் கைருல் அஸ்வான் ஹருனை போலீசார் விசாரணை செய்வார்கள்.
அப்புகார் பற்றி வினவிய மலேசியாகினியிடம் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இவ்வாறு தெரிவித்தார்.
“முதலில் புகார்தாரரிடம் பேச வேண்டியுள்ளது.
“அது, முக்கிய பெருமக்களுக்கு எதிரான ஒரு கடுமையான குற்றச்சாட்டு என்பதால் ஏன் அவர் அப்படி ஒரு புகாரைச் செய்தார், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அவரால் வழங்க முடியுமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது”, என்றாரவர்.
கைருல் அஸ்வான் நேற்று செய்த போலீஸ் புகாரில், பேங்க் நெகாரா முன்னாள் ஆளுனர் ஸெட்டி அக்தார் அசீஸ், பணி ஓய்வு பெறவுள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த் தலைவர் அபு காசிம் முகம்மட் , முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல் ஆகியோர் அச்சதித் திட்டத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
எல்லாம் நாடகமேடை அதில் எங்கும் நடிகர் கூடடம்.