1எம்டிபி-இன் கடன்களைச் சரிக்கட்ட கிழக்குக் கரை இரயில் (இசிஆர்எல்) திட்டத்துக்கான செலவுத் தொகை ரிம30 பில்லியனிலிருந்து ரிம60 பில்லியனுக்கு உயர்த்தப்படும் என்று சரவாக் ரிப்போர்ட் ஆகக் கடைசியாகக் கூறியுள்ளதை புத்ரா ஜெயா மறுக்கிறது.
அத்திட்டத்துக்கான செலவு குறித்து அமைச்சரவை விவாதிக்கவில்லை என்று பொதுப் பணி அமைச்சர் படில்லா யூசுப் கூறினார்.
“சரவாக் ரிப்போட் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை. அது பற்றி அமைச்சரவையில் பேசப்படவே இல்லை”, என மலாய் மெயில் ஆன்லைனிடம் அமைச்சர் சொன்னார்.
செய்தியை வெளியிட்ட சரவாக் ரிப்போர்ட் அது தொடர்பான ஆவணங்கள் சிலவற்றையும் வெளியிட்டிருந்தது. அவை இரகசியமாக தகவல் அளித்தவரிடமிருந்து கிடைக்கப்பெற்றவையாம்.
அமைச்சரவையில் பேசியிருந்தால் அனைத்து பத்திரிக்கைகளுக்கும் தெரிந்திருக்கும், அந்தபுறத்தில் பேசுவது சரவாக் ரிப்போர்ட் போன்ற பத்திரிக்கை மூலமாகத்தான் மக்களுக்கு தெரியவருகிறது.
இவன்கள் எப்போது உண்மையை ஒப்பு கொள்வான் கள்? அப்பட்டமான உண்மையையே பொய்யாக்கி வெட்கமில்லாமல் அதிகாரத்தில் ஆட்டம் போடுகிறான்கள்
மறுத்தால் அது எங்கள் கட்சியில் உண்மையே என்று அர்த்தம் எல்ல்லா
மறுக்கப்படட விஷயமும் உண்மையே