மலேசிய ஊழல்- தடுப்பு ஆணையத் தலைவர் பதவியிலிருந்து ஆகஸ்ட் மாதம் பணிஓய்வு பெறும் அபு காசிம் முகம்மட்டுக்குப் பதில் போலீஸ் படை துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் தலைமை ஆணையர் பதவிக்குப் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாக சீனமொழி நாளேடு ஓரியெண்டல் டெய்லி கூறியுள்ளது.
எம்ஏசிசி தலைவர் முன்கூட்டியே பணி ஓய்வு பெற விரும்புவதை அடுத்து அப்பதவிக்குப் பொருத்தமான ஒருவரை அரசாங்கம் தேடிக் கொண்டிருந்ததாக அந்நாளேடு கூறிற்று.
நூர் ரஷிட் கடந்த மாதம் லண்டனுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டிருந்தபோதே இப்பதவி அவருக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், அவர் உடனே அதை ஏற்கவில்லையாம். அது குறித்து முடிவெடுக்க அவகாசம் கேட்டிருக்கிறார்.
அரசாங்கப் பணியாளர்களுக்கான பணி ஓய்வு வயது 60 என்பதால் நூர் ரஷிட் இப்போதைய வேலையிலேயே இன்னும் ஈராண்டுகள் நீடிக்கலாம்.