பினாங்கில் திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் எதிரணி பல இடங்களை இழக்கும் ஆபத்து உள்ளது என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார்.
“எல்லாருக்குமே அந்த ஆபத்து உண்டு. மும்முனைப் போட்டி என்று வந்து விட்டால் யாருக்கும் வெற்றி கிடைக்காது அம்னோவைத் தவிர”, என நூருல் இஸ்ஸா இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பினாங்கில் திடீர் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இருப்ப்பதாக பிகேஆர் கருதவில்லை. அதைக் கடந்த செவ்வாய்க்கிழமையே அது டிஏபி-யிடம் தெரிவித்து விட்டது. ஆனால், பக்கத்தான் ஹராபானின் இன்னொரு பங்காளிக் கட்சியான அமனா திடீர் தேர்தல் நடத்தும் டிஏபி-யின் திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்து விட்டது.
திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் பி.கே.ஆர். பல இடங்களை இழக்க நேரிடும். இதுவே அப்பன் மவன் திட்டம். நஜிப் நினைப்பது போல அப்பனும் மவனும் நடந்து கொண்டால், மவன் வழக்குகளில் இருந்து தப்பிக்க நஜிப் உதவி செய்வார். அதனால்தான் திடீர் தேர்தல் நடத்த அப்பனும் மவனும் துடிக்கிறார்கள். எதிர்க்கட்சி கூட்டணியை நார் நாராக கிழிப்பதுவே தற்போது அப்பனும் மவனும் சேர்ந்து செய்யும் வேலை.