பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றம், மாநிலச் சட்டமன்றத்தில் ‘celaka Umno’ என்று கூறியதற்காக ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த தேசிய நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து அவரை இன்று விடுவித்தது.
அரசுத் தரப்பு ராயருக்கு எதிராக தெளிவான ஆதாரங்களைக் காண்பிக்கவில்லை என செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் ஒஸ்மான் கூறினார்.
ராயர் அவ்வாறு கூறியது தேச நிந்தனைக் குற்றம்தான் என்று நிதிமன்றத்தை நம்பவைக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்றாரவர்.
அம்னோ தொடர்பில் ராயர் பயன்படுத்திய சொற்கள் தேச நிந்தனைக்குரியவை அல்ல என்று நீதிபதி உரைத்ததாக பெர்னாமா கூறியது.
“குற்றம் சாட்டப்பட்டவர் எந்த இனத்தையோ, சமூகத்தையோ நோக்கி அவ்வாறு சொல்லவில்லை, சில தனிப்பட்டவர்களை நோக்கி, குறிப்பாக ரீசல் மரைக்கான் நயினா மரைக்கான், ஷாபுடின் யாஹ்யா ஆகியோரை நோக்கித்தான் அவ்வாறு சொன்னார்.
“அம்னோ ஒரு அரசியல் கட்சி. டிஏபி, பாஸ், பிகேஆர் போன்று சங்கச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஒன்று.
“ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக சொல்லப்பட்டதை ஓர் இனத்துக்கோ சமூகத்துக்கோ எதிராக சொல்லப்பட்டதாகக் கருதுவதற்கில்லை”, என்றார்.
நாட்டில் நேர்மையான நீதிபதிகளும் உண்டு என்பதற்கு இதன் தீர்ப்பு ஆதாரம். நன்றி.
இது உண்மையிலேயே ஆச்சரியம் தான். ஒரு காலகட்டத்தில் இருந்தனர் ஆனால் காக்காத்திமிர் அவர்களை எல்லாம் ஓரம் கட்டி அரைவேக்காடு மாறியப்பன்களை நீதிபதிகள் ஆக்கி அவனுக்கு சாதகமாக செயல் பட வைத்தான் – அது தான் இன்றைக்கும் நடக்கிறது. எத்தனை சீன இந்திய நீதிபதிகள் இருக்கின்றனர்? 1957 ன் நிலை ?