பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி குற்றச்சாட்டுகளில் அமிழ்ந்திருக்கும் 1எம்டிபிக்கான புதிய கணக்காய்வர் குழுவில் சேர்ந்துகொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் ஒரு தகுதி பெற்ற சார்ட்டெட் அக்கவுண்டன். அவர் Institute of Charted Accountants England and Wales மற்றும் Malaysian Institute of Accountants ஆகிய அமைப்புகளில் அங்கம் பெற்றுள்ள உறுப்பினர்.
“நான் எனது சேவையை இலவசமாகவும் அளிக்கத் தயாராக இருக்கிறேன்”, என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
1எம்டிபி விவகாரத்தில் தவறுகள் ஏது இல்லை என்று அதன் வாரிய இயக்குனர்கள் உறுதியாக நம்பினால், மக்களை நம்ப வைப்பதற்கும் சிக்கனத்தை கடைபிடிப்பதற்கும் மிகச் சிறந்த வழி தம்மை புதிய தணிக்கை குழுவில் ஓர் உறுப்பினர் நியமிக்க வேண்டும் என்றாரவர்.
இது பற்றி தாம் அதிகாரப்பூர்வமாக 1எம்டிபி இயக்குனர்கள் வாரியத்தின் தலைவர் இர்வான் சிரீகருக்கு எழுதப் போவதாக ரபிசி மேலும் கூறினார்.
தணிக்கை செய்து ஆக போவது ஒன்றுமில்லை ரபிசி !
“1MDB” ஆலோசகரின் தவறான ஆலோசனையின் பேரில் (எண்ணெய் விலை USD 140/= வரை உயரும்) எண்ணெய் வளமுள்ள நாடுகளின் நிறுவனங்களில் முதலீடு செய்து (அப்போதைய எண்ணெய் விலை USD 80/=) குறுகிய காலத்தில் பெரும் லாபம் அடையலாம் என்ற பேராசையும், “1MDB” ஆலோசகரின் கெட்டநேரமும் சேர்ந்து எண்ணெய் விலையை வெற்றிகரமாக அகல பாதாளத்திற்கு (எண்ணெய் விலை USD 40/= வரை) கொண்டு சென்று விட்டது.
இதை ஒப்புக்கொண்டால் “ஒரு நிறுவனத்தையே நிறுவகிக்க முடியாதவர் எப்படி ஒரு நாட்டை நிறுவகிக்க முடியும்?” என கேள்வி எழுமே என்ற பயத்தினால் கதை சொல்லி கொண்டிருப்பது மக்களுக்கு தெரியாதா என்ன ?