மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படும் உயர் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, சில தரப்புகளுக்கு அவர்களின் முயற்சிகள் பிடிக்கவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.
“எம்ஏசிசி அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள், ஊழலை எதிர்க்கும் கடப்பாடு கொண்டவர்கள். அவர்களின் முயற்சிகள் வெறுக்கப்படுவதுதான் அதிர்ச்சி அளிக்கிறது”, என பெர்சே தலைவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
நேற்று, எம்ஏசிசி உயர் அதிகாரிகள் மூவர்- தலைமை ஆணையர் அபு காசிம் முகமட் , துணை ஆணையர்(நடவடிக்கை) முகம்மட் ஷுக்ரி அப்துல், துணை ஆணையர்(தடுப்பு) முஸ்டபார் அலி- அந்த ஆணையத்திடமிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டனர்.