இணையத்தில் பிரபலமாக விளங்கும் போக்கமோன் கோ விளையாட்டு
உளநோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாக அமையும் என்கிறார் உளநோய் வல்லுனர் ஒருவர்.
“மனக் கலக்கம், மனச் சோர்வு முதலிய மனநிலைகளைக் குணப்படுத்த இது உதவுகிறது”, என கோலாலும்பூர் அனைத்துலக உளநோய் மையத்தின் தலைமை உளநோய் ஆலோசகர் டாக்டர் எட்வர்ட் சான் கூறினார்.
எடுத்துக்காட்டுக்கு, மனச் சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் எதிர்மறை எண்ணங்களைக் கைவிடவும் அவர்களின் கூட்டுக்குள்ளிருந்து வெளியுலகுக்கு வரவும் இது மறைமுகமாக உதவுகிறது என்றாரவர்.
“அவர்கள் வீட்டுக்குள்ளேயே கிடந்து உழலாமல் வெளியுலகம் வந்து இந்த விளையாட்டில் ஈடுபாடு கொண்ட சக மனிதர்களுடன் கலந்துறவாடுவார்கள் அதன்வழி தன்மதிப்பையும் சமூகத் திறன்களையும் மேம்படுத்திக் கொள்வார்கள்”, என்றவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.