1எம்டிபிக்கும் அமெரிக்க நீதித்துறை (டிஓஜே) வழக்குக்கும் சம்பந்தமில்லை என்ற பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கூற்று “அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறிய டிஏபி, அந்த நிதி நிறுவனத்தின் பெயர் நீதிமன்ற ஆவணம் முழுக்க விரவிக் கிடப்பதாக தெரிவித்தது.
“உண்மையைச் சொல்லப்போனால் 1எம்டிபி இன்றி அந்த 136-பக்க வழக்குக்கு அடிப்படையே இருக்காது. விழுந்து விடும்.
“136 பக்கங்களிலும் 1எம்டிபி விரவிக் கிடக்கிறது, முதல் 20 பக்கங்களில் 130 தடவை அது குறிப்பிடப்படுகிறது.
“அப்படி இருக்க நஜிப் எப்படி 1எம்டிபி -க்கு டிஓஜே வழக்கில் சம்பந்தமில்லை என்று கூற முடியும்?”, என டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் நேற்றிரவு ஜோகூர் பாருவில் ஒரு விருந்தில் பேசியபோது வினவினார்.
இவனுக்கு பொய் பேசியே உண்மை என்பது என்ன என்பதே புரிவதில்லை–அத்துடன் எல்லோருக்கும் அம்னோ புத்தி என்ற எண்ணம் போலும்–அம்னோக்காரனுக்கெல்லாம் அறிவு என்றாலே தெரியாதே. சொன்னாலும் புரியாது. அறிவோடு இவன்களால் பேசமுடியுமா? விவாதிக்க முடியுமா?