பினாங்கில் திடீர் தேர்தல் நடத்தும் திட்டத்தை டிஏபி கைவிட்டிருப்பதாக முதல் அமைச்சர் லிம் குவான் எங் அறிவித்தார்.
“அத்திட்டத்துக்கு பிகேஆர் ஒத்துக்கொள்ளவில்லை, அதுதான் காரணம்”, என்று லிம் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
அத்திட்டத்துக்கு பிகேஆரில் ஆதரவு இல்லை என்பதை அதன் துணைத் தலைவரும் சிலாங்கூர் மந்திரி புசாருமான அஸ்மின் அலி நேற்று தமக்குத் தெரியப்படுத்தியதாகவும் அதனை அடுத்து கட்சித் தலைவர்களுடனும் பினாங்கு மாநிலத் தலைமைத்துவத்துடனும் கலந்தாலோசித்து திடீர் தேர்தலைக் கைவிடுவதென்று முடிவு செய்ததாக லிம் சொன்னார்.
நல்ல முடிவு! திடீர் தேர்தலினால், யாருக்கும் இந்தப் பயனும் விளைய போவதில்லை.