அமைச்சர்: அம்னோவை ஒழிக்கவே மகாதிர் புதுக் கட்சி அமைக்கிறார்

saidமுன்னாள்   பிரதமர்   மகாதிர்   முகம்மட்    புதிய  கட்சி   அமைக்க    முனைந்திருப்பது    அம்னோவுக்கும்  பிஎன்னுக்கும்  விடுக்கப்பட்டுள்ள  ஒரு  சவாலாகும்   என்கிறார்   தொடர்பு,  பல்லூடக    அமைச்சர்  சாலே   சைட்  கெருவாக்.

மகாதிரின்    முயற்சியை    வரவேற்ற    அவர்,   போட்டி   நல்லதுதான்,  அது   மேலும்  கடுமையாக  உழைக்க    அம்னோவையும்  பிஎன்னையும்   உசுப்பி  விடும்  என்றார்.

“அந்த  வகையில்    போட்டி  கொடுப்பதன்வழி    மகாதிர்   அம்னோவுக்கும்  பின்னுக்கும்   நன்மைதான்  செய்கிறார்”, என  அமைச்சர்  தம்  வலைப்பதிவில்   பதிவிட்டிருக்கிறார்.

புதுக்  கட்சி   அமைக்கும்   மகாதிரின்   முடிவு   அவர்  அம்னோவைக்  காப்பாற்ற   முனையவில்லை,  அழிப்பதற்கு   முனைகிறார்  என்பதைத்   தெளிவாகக்  காண்பிக்கிறது.

“முடிவாக,  மகாதிர்   அரசாங்கத்தைப்  பொதுத்   தேர்தல்வழிதான்   மாற்ற  முடியும்  என்பதை   ஒப்புக்கொண்டிருக்கிறார்.  ஆனால்,   தாம்  அரசாங்கத்தை   மாற்ற  நினைப்பதை   அவர்  ஒப்புக்கொள்ள   மாட்டார்.

“அவர்,   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கை   அகற்றி    அம்னோவையும்  பிஎன்னையும்   மலேசியாவையும்   காப்பாற்றத்தான்    இவ்வளவும்  செய்வதாகக்  கூறிக்  கொண்டிருக்கிறார்”,என்றார்.

அம்னோமீது  பாசம்  இருப்பதாகக்  கூறிக்கொள்ளும்  ஒருவர்   அதைக்  காப்பாற்றப்போவதாகச்  சொல்லிக்கொண்டே  அதை  அழிக்க  முனைவது  விந்தையாக  உள்ளது   என  சைட்  கெருவாக்   கூறினார்.