தம் முன்னாள் கட்சியான அம்னோவுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் தொடுத்துவரும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மக்கள் ஊழலை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அம்னோ அதன் தலைவர் நஜிப் ரசாக் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதைத் தடுக்கப் போராடி வருகிறது என்றாரவர்.
“அதுதான் இப்போது அம்னோவின் போராட்டமாகும். அதனால்தான் நான் அதைவிட்டு விலகினேன்.
“ஒன்று கெட்டுப்போனதை அறிந்தால் அதைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அதுதான் நான் விரைந்து வெளியேறினேன்”, என்று மகாதிர் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.
மகாதிர், கெடா, கூலிம் அருகில், கராங்கானில் மலேசியாவைக் காப்போம் இயக்கத்தின் நிகழ்வு ஒன்றில் பேசினார்.
ஊழல் என்பது ஹராம். அது “நாட்டையே அழித்துவிடும்” என்பதால் மக்கள் அதை நிராகரிக்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
“எனவே, மக்கள் நாங்கள் அமைக்கும் புதிய கட்சியில் வந்து சேர வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
தாம் அமைக்கும் புதிய கட்சி ஊழலை எதிர்க்கும் என்றவர் சூளுரைத்தார்.
மகாதிமிர் அவர்களே! அரசியல் புரியாமல் உளறாதீர். ஊழல் ஹலால். ஊழல் புரியாவிட்டால் அம்னோவே அழிந்துவிடும். ஊழல் என்கிற மரத்தை நட்டு, உரமிட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்ததே நீர்தானே. தன் வினை தன்னை சுடும். ஒட்டப்பம் வீட்டை சுடும்.
டேய் வெங்காயம் –யாருக்கு இந்த அறிவுரை? நீ பண்ணிய அநியாயம்தானே இன்று இந்த நிலைக்கு நாட்டை கொண்டு வந்து இருக்கிறது? பக்கத்து சிங்கப்பூரை பார்த்தாவது தெரிந்து கொள்ள வேண்டாமா? ஒன்றுமில்லா ஒரு புள்ளி– இன்று மலிசியாயாவையும் பொருளாதாரத்தில் மிஞ்சி விட்டது. காரணம் ஏன்? தரம் தகுதி உள்ள வர்கள் அதிகாரத்தில் இருந்து பொறுப்பாக செயல்படுவதே–ஊழல் இல்லாமல்.
புளித்துப்போன கதை . பழையதை பேசியே தமிழன் கெட்டான் . மாற்றம் தேவை .வருங்கால மலேசியா சிறக்கட்டும் .
நீ ஆட்சியில் இருக்கும் வரை ஊழல் ஹலால்! நீ ஆட்சியை இழந்தவுடன் ஊழல் ஹராம்…
தன் வினை தன்னையே சுட்டுவிட்ட்து நொந்து போய் உளறுகிறார் மாம்ஸ் $$$$$???.
உன்னுடைய ஆள்காட்டி விரல் செமநேராக உள்ளது அதை கொண்டு உன்னுடைய மகன்களின் பின்னால் சரியாக இடம் பார்த்து குத்தவும் …குத்தியபின் அவர்களிடம் குறுகிய காலத்தில் எப்படியடா ….மலேசியாவில் உங்களால் பத்தாவது கோடீஸ்வரர்களாக முடிந்தது என்று கேட்டுப்பார் பதில் தெரியும். ஒட்டுமொத்த மலேசியாவின் ஊழலுக்கும் நீதானே அதிபதி .! ஊழலை ஒழிப்போம் …ஊழலை ஒழிப்போம் தவளை சொல்லுது
மலேசிய அரசியல்வாதிகளுக்கும் நண்டுக்கும் நிறைய தொடர்பு உண்டு.எனவேதான் மகாதீரரான தலைவர் நண்டு மற்ற நண்டுகளை முன்னே நடக்க அறிவுரை கூறுகிறது! நீர் மிஸ்டர் 1 ஆக இருக்கும் பொழுது “ஊழலையும் இலஞ்சத்தையும் அழிக்க முடியாது ஆனால் குறைப்பதற்கு முயற்சி செய்யாலாம்” என்று ஓலமிட்டது நீர்தானய்யா?
காகாதிரே ஊழல் உன்னுடைய ஆரம்பம்.இனவாதம் உன்னுடைய துரோகம்.மற்றவர்களை குறை சொல்ல வேண்டாமே.உன் ஆட்சி காலத்தில் நடத்திய அட்டுழியங்களை பின்பற்றியே தற்போதைய ஆட்சியும் உள்ளது.இனவாதியான நீ தமிழர்களை ஒடுக்கியது அதுவும் சாமி எதப்பன் உன் கையில் வைத்து ஆடம் போட்டது சரித்திரம் மறக்க முடியாதது.காலத்தால் அழியாதது.
உமது தலைமை ஆட்சியில் ஊழலே இல்லாதது மாதரி உளறுகிறீர்…?