ஆகஸ்ட் 27-இல், ஒரு பேரணி நடத்தி ‘Tangkap Malaysian Official 1 (மலேசிய முதல்நிலை அதிகாரியைக் கைது செய்)’ இயக்கத்தைத் தொடக்கிவைக்கப் போவதாக இளைஞர் அமைப்புகளையும் மாணவர் அமைப்புகளையும் கொண்ட கூட்டமைப்பு இன்று அறிவித்தது.
கோலாலும்பூரில் உணவகம் ஒன்றில் நடைபெற்ற அவ்வமைப்பின் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அதன் பேச்சாளர் அனிஸ் ஷியாரியா முகம்மட் யூசுப், அமெரிக்க நீதித்துறை வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலேசிய முதல்நிலை அதிகாரியைக் கைது செய்து குற்றஞ்சாட்ட வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்துவதே அந்த இய க்கத்தின் நோக்கம் என்றார்.
“அமைதிப் பேரணிக்கு முன்னதாக மாணவர்களும் இளைஞர்களும் மற்ற மாணவர்களுக்கும் கிள்ளான் பள்ளத்தாக்குக்கு அப்பால் உள்ளவர்களுக்கும் விளக்கமளிப்புக் கூட்டங்களை நடத்துவார்கள்.
“செயலில் இறங்க வேண்டிய தருணம் வந்து விட்டது. எல்லா இளைஞர்களும் ஆகஸ்ட் 27-இல் கோலாலும்பூரில் ஒன்றுசேருமாறு கேட்டுக்கொள்கிறோம்”, என கெசத்துவான் மகாசிஸ்வா மலேசியாவின் பேராளருமான அனிஸ் கூறினார்.
நல்ல முயற்சி! மலேசிய மக்கள் ஆதரவு தரவேண்டும்.