சமூக வலைத்தளங்களில் கருத்துவேறுபாடுகளைப் பகிர்ந்து கொள்ளலாம் ஆனால், அது வெறுப்பைத் தூண்டுவதாக இருக்கக் கூடாது என்கிறார் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சைட் சாலே கெருவாக் .
தொடர்பு, பல்லூடக அமைச்சராகி நாளை ஓராண்டு நிறைவுபெறும் வேளையில் சாலே பெர்னாமாவுக்கு அளித்த நேர்காணலில் அவ்வாறு கூறினார்.
“நாட்டுப்பற்று, ஒற்றுமை, நல்லிணக்கம் , சகிப்புத்தன்மை, ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பு போன்றவற்றை உருவாக்கும் தேசிய திட்டத்துக்கு அறிவாற்றலும் முதிர்ச்சியான சிந்தனையும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் தகவலறிந்த சமுதாயமும் பெரிதும் உதவியாக இருக்கும்.
“கருத்துவேறுபாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை , வரவேற்கப்பட வேண்டியவை என்பதுதான் என் கருத்து. கருத்துவேறுபாடுகள் ஒற்றுமைக்குறைவுக்கும் வெறுப்புணர்வுக்கும் இட்டுச் செல்ல வேண்டிய அவசியமில்லை”, என சாலே கூறினார்.
இதை நீங்கள் அம்னோவினரிடம் சொன்னால் எவ்வளவோ நல்லதாக இருக்கும்! பொது மக்கள் பிரச்சனை அல்ல இது!