அன்வார்: என்எஸ்சி செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும்

anwarமுன்னாள்     எதிரணித்    தலைவர்     அன்வார்   இப்ராகிம்,   நேற்று  அமலுக்கு    வந்த    தேசிய   பாதுகாப்பு   மன்ற(என்எஸ்சி)    சட்டம்      சட்டவிரோதமானது   என்று     அறிவிக்கக்   கோரி    மனு  தாக்கல்  செய்துள்ளார்.

அந்தச்   சட்டம்   அளிக்கும்   அதிகாரத்தை   என்எஸ்சி   பயன்படுத்தாமல்   தடுக்க   நீதிமன்றத்   தடையுத்தரவைப்  பெறும்   முயற்சியிலும்   அவர்  இறங்கியுள்ளார்.

மனு   தாக்கல்    செய்ய    அன்வாருடன்    நீதிமன்றம்    சென்ற    அவரின்    துணைவியாரும்    எதிரணித்   தலைவருமான    டாக்டர்    வான்   அசிசா   வான்  இஸ்மாயில்,   மக்கள்   அவர்களின்  உரிமைகளைப்  பெற  எப்படிப்  போராட   வேண்டும்  என்பதற்கு   அன்வார்  ஓர்  எடுத்துக்காட்டு   என்றார்.

“ஆட்சியாளர்   மன்றம்கூட    அதற்கு(அச்சட்டத்துக்கு)   எதிர்ப்பு   தெரிவித்தது.  அதை   அரசிதழில்      வெளியிடுஅவதற்குமுன்     மறுபரிசீலனை   செய்ய   வேண்டும்   என்று   கேட்டுக்கொண்டது.  ஆனால்,  அரசாங்கம்   செவி  சாய்க்காமல்   அதைச்  சட்டமாக்கியது.

“எனவே,  நாம்   இப்போது   நடவடிக்கையில்   இறங்க  வேண்டும்.  அது  முக்கியம்”,  என்றாரவர்.