பத்து கவான் அம்னோ முன்னாள் உதவித் தலைவர் கைருடின் அபு ஹாசன் முன்னாள் அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் பதிவு செய்யப்போகும் புதிய கட்சியில் சேர மாட்டார்.
கைருடின் இன்று விடுத்த அறிக்கையில் தனக்கு “அரசியல் ஆசை” கிடையாது என்றும் கட்சிக்கு வெளியில் இருந்துகொண்டேகூட ஊழலை எதிர்க்கலாம் என்றும் கூறினார்.
மலேசியாகினி அவரைத் தொடர்பு கொண்டபோது முகைதின் கட்சியில் சேரும் எண்ணம் தமக்கு இருந்ததில்லை என்றார்.
தன் ஆதரவு என்றென்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குத்தான் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மகாதிர் கட்சிக்குத் தலைமை ஏற்றால் சேர்வாரா என்று வினவியதற்கு கைருடின் கூறினார்: “100-க்கு 100 அதை ஆதரிப்பேன். முதல் ஆளாக பதிவு செய்துகொள்வேன்”.
முதலில் மகாதிர்தான் புதிய கட்சியை அமைக்கப்போவதாக கூறியிருந்தார்.
ஆனால், நேற்று முகைதின் புதிய கட்சி ஒன்றை சங்கப்பதிவகத்தில் (ஆர்ஓஎஸ்) பதிவு செய்யப் போவதாக அறிவித்தார்.
முகைதின் முகாமில் பிளவு எதுவுமில்லை என கைருடின் சொன்னார். முகைதினுக்கும் தமக்கும் பிரச்னை ஏதுமில்லை என்றார்.
“என் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை……கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு போராடுவதுதான் எனக்குப் பிடிக்கிறது என்றாரவர்.
உனக்கு விருப்பம் இல்லைன்னா தூக்கு மாட்டிகிட்டு தொங்குடா