முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் பதிவு செய்யும் கட்சி மலாய்க்காரர்/ பூமிபுத்ரா கட்சியாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஏ. காடிர் ஜாசின் கூறினார்.
“உலகமயமும் சீர்திருத்தமும் வெளிப்படைத்தன்மையும் நிறைந்த காலக்கட்டத்தில் மலாய்க்காரர் மற்றும் பூமிபுத்ராக்களின் போராட்டத்தைத் தொடர்வதும் புதிப்பிப்பதும் அக்கட்சியின் குறிக்கோளாகும்”, என காடிர் அவரது வலைப்பதிவில் கூறினார்.
இன்று இணையத்தின்வழி புதிய கட்சியைச் சங்கப் பதிவகத்தில் (ஆர்ஓஎஸ்) பதிவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
“அதற்குத் தேவையான ஆதாரங்கள் திங்கள்கிழமை ஆர்ஓஎஸ்ஸிடம் நேரடியாக ஓப்படைக்கப்படும்”, என்றாரவர்.
இனக்கட்சி களினால் தானே இந்த அளவுக்கு இந்த நாடு நாற்றமெடுத்து பிளவு பட்டு கிடக்கிறது? இந்த கம்மனாட்டிகள் மறுபடியும் அதையே செய்ய வேண்டுமா? திருந்தவே மாட்டாங்கள் இந்த நாதாரிகள்.
எந்த கட்சியிலும் எங்களுக்கு இடம் வேண்டாம்…ஆனால் எந்த கட்சி 1957 சுதந்திரத்துக்குப் பின் பிறந்த எங்களையும் பூமிபுத்ராக்களாக ஏற்று எங்களுக்கும் உரிய சலுகைகளை வழங்குமோ அதுவே எங்களுக்கும் எதிர்கால மலேசியாவுக்கும் ஏற்ற கட்சி..
“அம்னோ மலாய்க்காரர்களுக்கும் பூமிபுத்ராக்களுக்குமானது” என்பதுபோல “புதிய கட்சியும் மலாய்க்காரர்களுக்கும் பூமிபுத்ராக்களுக்குமானது” என்று கூறி அம்னோவை பிளவு படுத்தும் முயற்சியாவது வெற்றி பெறுகிறதா பொறுத்திருந்து பார்ப்போம்.
நாட்டின் தற்பொழுதைய நிலையிலும் இனவாத கட்சி தேவைதானா?
அம்னோவிற்கு மாற்றாக உருவான PKR பல இனத்தவர்களை கட்சியில் சேர்த்ததால்தான் அம்னோவை பிளவு படுத்தும் முயற்சி தோல்வி அடைந்து விட்டது எனலாம். இந்த புதிய கட்சியாவது மலாய்க்காரர்களையும் பூமிபுத்ராக்களையும் அரவணைத்து அம்னோவை பிளவு படுத்துவதில் வெற்றி பெறட்டுமே.