கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்திலும் கேஎல்ஐஏ 2-இலும் பயணிகள் சேவைக் கட்டணம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய மலேசிய விமான நிறுவன(எம்ஏஎஸ்) தலைமை செயல் அதிகாரி பீட்டர் பெல்லூ நடப்புக் கட்டணங்கள் போட்டிகரமாக இல்லை என்றார்.
மாஸ் ஆதாயம் காணும் நிறுவனமாக விளங்க அது அவசியம் என்றாரவர். அதன் மூலமாகத்தான் தொழிலாளர்களின் நலன் காக்க முடியும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றாரவர்.
“கேஎல்ஐஏ-2 இருப்பதைவிட கேஎல்ஐஏ-இல் அனைத்துலக பயணிகளுக்கான சேவைக் கட்டணம் ரிம33 அதிகமாகும்”, என்றவர் சொன்னார் .
அதற்காக எம்ஏஎஸ் ஆண்டுக்கு ரிம100 மில்லியனுக்குமேல் செலவிட வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.