பாகிஸ்தானி ஒருவரிடம் கொள்ளையிட்ட திருடர்களை பொந்தியான் போலீசார் 24 மணி நேரத்தில் பிடித்ததாக சினார் ஹரியான் கூறுகிறது.
இரண்டு நாள்களுக்குமுன் பொந்தியான் நகரில் இரு ஆடவர்கள் ரேம்போ-பாணி கத்தியை அந்த பாகிஸ்தானியர் கழுத்தில் வைத்து அழுத்தி அவருடைய கைபேசியையும் ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்தையும் கொள்ளையடித்தனர்.
கொள்ளையடித்ததோடு போகாமல் கைபேசியைக் கொண்டு செல்பி எடுத்துக் கொண்டார்கள். அதுதான் அவர்களுக்கு வினையாகப் போயிற்று என போலீஸ் வட்டாரமொன்று தெரிவித்தது.
அந்த செல்பி அவர்களின் இருப்பிடத்தைக் காண்பித்துக் கொடுத்து விட்டது.
திருட்டை குறைக்க பல தொழில்நுட்ப வசதிகள் இருந்தும், போலீசார் ஆமை வேகத்தில் செயல்படுவதால் குற்ற செயல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.