மஇகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் 28வது மலேசிய திரைப்பட விழா(எப்எப்எம்)வில் படங்களை மொழிவாரியாக பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனத்தை(பினாஸ்)க் கேட்டுக்கொண்டார்.
மலேசியர்களை ஒன்றிணைப்பதில் கலைத்துறை மற்ற தொழில்துறைகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றாரவர்.
“ஏன் இந்தப் பாகுபாடு? ஒற்றுமை ஊடகங்களான பண்பாடு, விளையாட்டு போன்ற துறைகளில் பிரிவினையை உருவாக்கி விடாதீர்கள்”, என்றவர் வலியுறுத்தினார்.
எதிர்வரும் மலேசிய திரைப்பட விழாவில் திரைப்படங்கள் மலாய்மொழி பிரிவு , மலாய்மொழி அல்லாத பிரிவு என இருவகையாக பிரிக்கப்பட்டு விருதளிக்கப்படும் என்று பினாசும் மலேசிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் அறிவித்துள்ளது குறித்து சுகாதார அமைச்சர் கருத்துரைத்தார்.
இந்த நாட்டில் தமிழர்கள் பல வழிகளில் புறக்கணிக்கபடுகிறார்கள். கல்வி, வேலை, வியாபாரம் மற்றும் பல. இதற்கு யார் காரணம். அன்று கேட்க வேண்டியதை கேட்கவில்லை.அன்று பதவியில் உள்ளவர்கள் தனது பதவிக்கும் பட்டத்துக்கும் ஆசைப்பட்டு நம்மை தெருவில் விட்டார்கள். இன்றும் அதே அவலநிலைதான்.
பிரிவினை இருந்தாதான் ஆளும் கட்சியின் கூட்டு களவாணி மஇகா-காரன்கள் சம்பாதிக்க முடியும். நீங்கள் சொல்ற மாதிரி நடந்திட்டா மஇகா-காரன்கள் சோத்துக்கு சு… ஊ… தான்.
கபட நாடகத்தின் கதாநாயகனே சுப்பு ரொம்ப அலட்டிக்காதே அப்புறம் வைச்சிற போறாங்க ஆப்பு.
தகுதி இல்லாதவர்களோடு தகுதி உள்ளவர்களைச் சேர்க்க முடியாது! அப்படிச் சேர்த்தால் தகுதி இல்லாதவன் எந்தக் காலத்திலும் தகுதி இல்லாதவனாகவே வாழ வேண்டி வரும்! அதற்கு மாற்று வழி இப்படித்தான் செய்ய வேண்டும்!