மலேசியத் திரைப்பட விழாவில் மலாய்மொழி பிரிவு மற்றும் மலாய்மொழி அல்லாத பிரிவு என இருவகையாக பிரிக்கப்பட்டு விருதளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து திரைப்படக் கலைஞர்களில் ஒரு பகுதியினர் விழாவைப் புறக்கணிக்கும் வேளையில் ‘ஜகாட்’ திரைப்படம் அதைப் புறக்கணிக்காது.
பகாசா மலேசியாவில் அமைந்திராத படங்கள் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் முதலிய விருதுகளுக்குத் தகுதிபெற மாட்டா என அறிவிக்கப்பட்டிருக்கிறது, இது இனவாதம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஜகாட் அது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மற்ற ஒன்பது பிரிவுகளிலும் போட்டியிடும் என அதன் நிர்வாக தயாரிப்பாளர் சிவானந்தம் பெரியண்ணனும் இயக்குனர் சஞ்சய் குமார் பெருமாளும் கூறினர்.
அதேவேளை அவர்கள், திரைப்பட விழாவைப் புறக்கணிக்கும் அல்பி பாலர்மோ(சிலாங்கூர், கோலாலும்பூர் திரைக்கதாசிரியர் சங்கம்), அல்-ஜப்ரி முகம்மட் யூசுப் (கொம்முனிடி பிலிம் தித்திவங்சா), அப்ட்லின் செளகி(நடிகர்/ இயக்குனர்), முகம்மட் நோர் காசிம் முதலியோரின் செயலையும் உயர்வாக மதிக்கிறார்கள்.
அவர்களின் நிலைப்பாடு திரைப்பட விழாவில் சீரமைப்புகளைக் கொண்டுவர உதவும் என்று நம்புவதாக அவ்விருவரும் ஓர் அறிக்கையில் கூறினார்.
அதேவேளை அவ்விருவரின் வியூகம் வேறு வகைப்பட்டது. திரைப்பட விழா ஏற்பாட்டாளர்களுடன் பேச்சு நடத்தி அதன்வழி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.
இனவாதம் 1980 ல் ஆரம்பிக்கப்பட்டு இன்று அப்பட்டமாக நியாயப்படுத்தட்டிருக்கிறது .