பிஏசி கூட்டத்திலிருந்து புவா வெளிநடப்பு

pua 1எம்டிபிமீதான  விசாரணையை   மறுபடியும்    தொடங்க   வேண்டும்  என்ற  பரிந்துரை  நிராகரிக்கப்பட்டதால்    பொதுக்  கணக்குக்குழு (பிஏசி)க்  கூட்டத்திலிருந்து  அதன்   உறுப்பினர்   டோனி   புவா    வெளிநடப்புச்   செய்தார்.

அமெரிக்க  நீதித்   துறை   கொண்டுவந்துள்ள    வழக்குகளைத்   தொடர்ந்து   1எம்டிபி  மீதான  விசாரணையை   மீண்டும்   தொடங்க  வேண்டும்  என்ற  பரிந்துரையைத்   தாம்   முன்வைத்ததாகவும்   அதை   பிஏசி   தலைவர்     ஹசான்   அரிபின்   நிராகரித்தார்  எனவும்   பெட்டாலிங்   ஜெயா   உத்தாரா  எம்பி   கூறினார்.

“அண்மைய  நிலவரங்களின்   அடிப்படையில்   அதன்மீது   மீண்டும்  விசாரணை  செய்யப்பட  வேண்டியது   அவசியம்.   இது   ஒரு   சாதாரண  விவகாரம்  அல்ல,  பிரதமரையே   அழைத்து  விளக்கம்   கேட்க  வேண்டும்”,என்று புவா   இன்று   நாடாளுமன்ற  வளாகத்தில்    செய்தியாளர்களிடம்    கூறினார்.