பாஸ் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ரிம90 மில்லியனை அக்கட்சிக்குக் கொடுத்தார் என்று கூறப்படுவதை “வெறும் புரளி” என சிலாங்கூர் பாஸ் நிராகரித்துள்ளது.
“பரவலான சந்தேகத்தை” அடிப்படையாக வைத்து அவ்வாறு கூறப்படுவதாக சிலாங்கூர் பாஸ் ஆணையர் இஸ்கண்டர் அப்துல் சமட் கூறினார்.
“அது வெறும் புரளி. பாஸின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற தீய நோக்கம் கொண்டவர்கள் கட்டிவிட்ட கதை”, என்றாரவர்.
பொதுமக்களும் “காப்பிக்கடைப் பேச்சாக” கருதி அதை ஒதுக்கித் தள்ளுவது உறுதி என்று இஸ்கண்டர் கூறினார்.
“காப்பிக்கடைப் பேச்சையெல்லாம் உறுதியான ஆதாரங்களாகக் கொள்ளப்படுமானால் சமுதாயத்தில் குழப்பம்தான் மிஞ்சும்”, என்றாரவர்.
சிறுவயதில் ஒன் மில்லியன் டொலர் மென் டிவி சீறி பார்த்த அனுபவம் . ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு 90 மில்லியன் ரிங்கிட் மென் பற்றி கேள்வி படு கிறேன். யார் அந்த மனிதன்.