பெர்சே அதன் பேரணியை நடத்துவதற்கு அரங்கம் தேடித்தர முன்வந்துள்ள கெராக்கான் இளைஞர் பகுதி, “சிவப்புச் சட்டையினர்” பேரணி நடத்த விரும்பினால் அவர்களுக்கும் அரங்கம் தேடிக் கொடுத்த தயார் என்று அறிவித்துள்ளது.
பேரணிகளுக்கு முறையான இடத்தை ஏற்பாடு கொடுக்கும் நோக்கம் கெராக்கான் இளைஞர் பகுதிக்கு உண்மையிலேயே உண்டு எனக் குறிப்பிட்ட அதன் தலைவர் டான் கெங் லியான், பேரணிகளைத் தெருக்களில் நடத்துவது ஆபத்து என்றார்.
“நீங்கள் விரும்பினால் எங்களைச் சந்திக்கலாம். உங்களுக்கு உதவத் தயார்”, என கோலாலும்பூரில் டான் கூறினார்.

























