அமெரிக்கா முன்பு ஈராக்கியர்களைக் கொன்று குவித்ததுபோல் மலாய்க்காரர்களையும் கொல்லப் பார்க்க்கிறது என்று கூறிய மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹருனை எதிரணி எம்பி ஒருவர் சாடினார்.
மலாக்கா முதல்வர் சொல்வது உண்மையானால் புத்ரா ஜெயா அமெரிக்கத் தூதரைத் திருப்பி அனுப்பி அந்த மகா வல்லரசின்மீது போர் தொடுக்க வேண்டும் என லிம் லிம் எங் கூறினார்.
இட்ரிஸ் தாம் கூறியதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மலேசியாவுக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த டிஏபி உறுப்பினர் கோரினார்.
இவ்விவகாரம் குறித்து அமைச்சர்கள் வாய்மூடி மெளனம் சாதிப்பது ஏன் என்றும் அவர் வினவினார்.
“அப்படியானால், பிஎன்னும் மொத்த அமைச்சரவையும் அமெரிக்கா அதன் நீதித்துறையைக் கொண்டு மலாய்க்காரர்களை அழிக்கத் திட்டமிடுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்களா?”, என லிம் வினா எழுப்பினார்.
பார்க்கப்போனால், மலேசியா அமெரிக்காமீது ஆத்திரம் கொள்ளக் கூடாது நன்றிதான் சொல்ல வேண்டும் என்றாரவர். ஏனென்றால் அந்நாடு 1எம்டிபி-இலிருந்து கையாடப்பட்ட பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அழிவுக்கு வழி தேடும் உம்னோ புழுதிகள்
அமேரிக்கா மீது போரா ? காமெடி பண்ணாதீங்க பாஸ்.
இவர் சொல்லும் இந்த ஜோக் சரித்திரத்தில் இடம் பெரும் ,மாபெரும் அறிவாளியை எங்கு பிடித்தார்கள் ???????????
1MDB விவகாரத்தில் ஹிலாரியுடன் நடத்தப்பட்ட பேரம் தோல்வியில் முடிந்து விட்டதுபோல் தெரிகிறது அதனால்தான் எங்கே Donald Trump அமெரிக்காவின் அதிபராகி விடுவாரோ என்ற பயத்தில் உளறுகிறான் உளறுவாயன்.
மடையர்களின் தலைவன்.