பூமிபுத்ரா- அல்லாதார், அவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டும் ஓர் அரசியல் கட்சியில் எதற்காகச் சேர வேண்டும் என்று வினவுகிறார் மஇகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்.
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியில் பூமிபூத்ரா உறுப்பினர்களுக்கும் பூமிபுத்ரா- அல்லாத உறுப்பினர்களுக்குமிடையே பாகுபாடு காட்டப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
“இரண்டு வகை உறுப்புரிமை – ஒன்று உரிமைகளைக் கொண்டது மற்றது உரிமையற்றது- அங்கு இனவேறுபாடு நிலவுவதைக் காண்பிக்கிறது. தொடக்கத்திலிருந்தே அது பாகுபாட்டைக் கடைப்பிடிக்கிறது.
“எனவே, பூமிபுத்ரா- அல்லாதார் அதில் சேர்ந்தால் தொடக்கத்திலிருந்தே அவர்கள் இரண்டாம் தர உறுப்பினர்களாகத்தான் நடத்தப்படுவார்கள்”,எனச் சுகாதார அமைச்சருமான சுப்ரமணியம் கூறினார்.
Subra, please urge your Umno superiors to create all Malaysians as Bumiputras. Dont simply carry balls for your own benefit under an Indian[MIC] umbrella.
மற்ற கட்சியினரை குறை கூறும் அருகதை உங்களுக்கு [சுப்பிரமணியம்] கிடையாது என்பது எனது அபிப்பிராயம். 70 ஆண்டுகளுக்கும் மேலாக அம்னோவினர் போடும் பிச்சை காசுக்காக அரசியல் நடத்தி, இந்திய சமுதாயத்தையே இந்த இந்தோனேசிய வந்தேறிகளிடம் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இந்நாட்டில் பிறந்த நீங்களும் பூமிப்புத்திராக்கள் தானே. இதனை தட்டிக் கேட்கும் தைரியம் உங்கள் ம.இ.கா.வில் ஒரு பயலுக்கும் கிடையாதா? இந்தோனேசிய மைந்தனான அப்துல் ரசாக் இந்நாட்டு பூமிபுத்திரா என்றால், இந்நாட்டுக்காரனான நானும் பூமிபுத்ராதான் என 1968 ல் மலேசிய நாடாளுமன்றத்தில் முழங்கியவர் அன்றைய DAP MP யும் பின்னாளைய சிங்கப்பூர் அதிபருமான, C.V. தேவன் நாயர். அதே பிளாட்டை [plate] 1975 ல் மலேசிய நாடாளுமன்றத்தில் போட்டார், Dr.V.டேவிட். துருக்கியிலிருந்து மலேயாவுக்கு பிழைக்க வந்த நீ இந்நாட்டு பூமிபுத்திரா என்றால், இந்நாட்டில் பிறந்து, வளர்ந்து, இம்மக்களுக்காகவே போராடிவரும் நானும் இந்நாட்டு பூமிபுத்ராதான். [மறைந்த துன் ஹுசேனை நோக்கி இப்படி எரிந்து விழுந்தார், மக்கள் தொண்டன்]. ஆனால், இன்று? நீங்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி சூரப்புலிகளும், எதற்குமே லாயக்கற்றவர்கள் போல் தோற்றம் கொண்டவர்களாக உள்ளனர்.
ம இ கா கட்சி தமிழர்களை UMNO வுக்கு அடிமையாக்கும் கட்சி.
அன்பர்களே– MIC ஒரு காசுக்கு புண்ணியமில்லை –ஆனால் அவங்களின் வங்கிக்கணக்கு மட்டும் நிரம்பி இருக்கும்.நம்மை அன்றே சம்பந்தன் விற்று விட்டான். அதன் பிறகு வந்த தலைகள் சப்பிகள்- இன்றும் அதே நிலைதான்
என் தாய் தமிழ், நீங்கள் அவரைவிட வயதானவர் என்பதால் அவரைப்பற்றி அப்படி பேசுவது சரியல்ல! அவர் வாங்கிய தோட்டங்களின் மூலம் ஓரளவு நமது சமுதாயம் பயன் அடைந்திருக்கிறது. அந்தத் தோட்டங்கள் தாம் இன்று நமது நாட்டின் குறைந்தபட்சம் ஒரு விழுக்காடு நமது பொருளாதார வளர்ச்சியாக காட்டிக் கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் நமது பொருளாதார வளர்ச்சி என்று எதுவும் இல்லாமல் போயிருக்கும்!
நமது சமுதாயம் பயன் அடைந்திருக்கிறது? எத்தனை தோட்டங்கள் வாங்கப்பட்டன? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது? இப்போது யார் அதனை அனுபவிக்கின்றனர்? அவரின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது ஆனால் சாமிவேலுவைப்போல் அவனின் குஞ்சுகள் தான் பயன் அடைந்தனர். இன்றைய நிலையில் அதன் வழி குறைந்தது 50 தோட்டங்களாகவாவது வாங்கி இருக்க வேண்டும். ஆனால் தோட்ட பாட்டாளிகள் ஏமாற்றப்பட்டதே உண்மை– நீங்கள் யார் அதன் பங்கு வாங்கினார்களோ அவர்களை கேட்டுப்பாருங்கள்.
அவர்கள் இடத்தில் நீங்கள் இல்லாமல் போனது எமக்கும் வருத்தமே! இருந்திருந்தால் 50 தோட்டங்கள் வாங்கியிருப்பிர்கள். உங்கள் பிள்ளைகள் யாரும் பயன் அடைந்ததிருக்க மாட்டார்கள். என்ன செய்வது? எல்லாம் காலத்தின் கோலம்! ஆனாலும் ஏதோ அவருடைய திறமைக்கு ஏற்ப அவரால் முடிந்ததை சம்பந்தன் செய்திருக்கிறார். அதனைப் பாராட்டுவோமே!
சுப்ரா சார்..பெர்சத்து கட்சி பாரபட்சம் காட்டலைன்னா அந்த கட்சியில ம.இ.கா வை இணைச்சுடுவீங்களா சார்..
வீராசாமி தோட்டம் என்ற தன் சொந்த தோட்டத்தை விற்று , மக்களுக்காக ஒரு சங்கத்தை அமைத்து அதன் வலி ஒரு சில தோட்டங்கள் வாங்கி , இன்று தமிழன் தலைநகரில் தலை நிமிர்ந்து பார்ப்பதற்கு ஒரு கட்டிடம் கட்டி , தமிழனின் பெருமையை காத்த தியாகத் தலைவன் துன் சம்பந்தன் . நாடாளு மன்றத்துக்கு , இந்திய பாரம்பரிய உடை ,ஜிப்பா, வேட்டியோடு பீடு நடை போட்ட சாதாரண மக்கள் தலைவன் ! ஒரு நாள் பிரதமராக சரித்திரம் படைத்தவர் ! ஒரு உயர்த்த மனிதரை குறை கூறும் முன் உண்மையை புரிந்து எழுதுங்கள் ! தனக்கென்று ஏதும் சேர்த்து வைக்காமல் இந்த ஏழை ,குறிப்பாக ஏழை பாட்டாளி மக்களுக்காக ! சொத்துகளை இழந்து குடும்பத்தை இழந்து உயிர் விட்டவர் ! ம இ கா அவரின் களம் மக்களுக்கு சேவை ஆற்ற அரசியலுக்கு வந்தார் !! பணம் சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கல்ல , செல்வந்தராக அரசியலுக்கு வந்து ஏழையாக உயிர் விட்டவர் ! ஒற்றுமை துறை வாரிய தலைவராக அரசாங்கம் அவரை நியமித்ததை வைத்து அரசாங்கம் அவர் மேல் வைத்திருந்த மதிப்பையும் மரியாதையையும் அறிந்து கொள்ளலாம் !!
ஜிப்பா வேட்டியோடு மக்கள் மன்றத்திற்கு செல்வதை பற்றி நான் பல முறை கூறியிருக்கிறேன். தோட்டங்கள் வாங்கியது மக்களின் பங்கு பணத்தில்– அவரின் சொந்த பணத்தில் எவ்வளவு என்று எனக்கு தெரியாது. அவர் துங்குவை மிகவும் நம்பியது வருங்காலத்தில் நமக்கு நல்லது நடக்க வில்லை. அப்படியே அவர் அகால மரணம் அடையாதிருந்தால் 1969 பிறகு- அவர் ஜிப்பா வேட்டியுடன் மக்கள் மன்றத்திற்கு செல்ல முடிந்திருக்குமா என்பது சந்தேகமே– ஒற்றுணை துறை வாரியத்தின் தலைவராக அரசு நியமித்தது வெறும் கண்துடைப்பு– இப்போது இருக்கும் MIC அமைச்சர்கள் மட்டும் என்ன? நாம் யாரையும் குறை கூறலாம்–அது தவறாகாது– ஆண்டவனையே குறைகூறும் நாள் இது. சம்பந்தன் எவ்வளவோ செய்திருக்க முடியும். நம்முடைய இன்றைய இழி நிலை ஏன்?
துன் சம்பந்தன் வழியாவது இன்று நமக்கும் பெயர் சொல்ல சில தோட்ட்ங்கள் மற்றும் தலைநகரில் விஸ்மா துன் சம்பந்தன் கட்டிடம் உள்ளது.மாணிக்கவாசகம் கட்டிய மஇகா தலைமையகம் தலைநகரில் உள்ளது. அதன் பிறகு வந்த நாட்டேரிகள் சமுதாயத்தை அடமானம் வைத்தது அல்லாமல் உரிமைகளையும் இழக்க நேரிட்டது. கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து ஏப்பம் விட்டது இந்த நாதேரிகளின் சாதனை. இனிமேலும் இந்த அவல நிலைதான் தொடரும். மாற்றம் இல்லேயேல் சமுதாயம் படு வீழ்ச்சிதான்.
s.maniam கூறுவது முற்றிலும் உண்மை. ஒரு சிறு திருத்தம். வீராசாமி திட்டம் விற்கப்படவில்லை. அன்றைய நிலவரப்படி, [1960] 12 லட்சம் வெள்ளிக்கு அடமானம் [அடகு] வைக்கப்பட்டது. கூட்டுறவு சங்கத்திற்கு ஒரு தொகை முதலீடு போக, சுங்கை சிப்புட்டிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கந்தான் என்கிற இடம் உண்டு. அந்த சிறிய கிராமத்தின் அருகில் சம்பந்தனின் தகப்பனார் வீராசாமிக்கு ஒரு தோட்டம் இருந்தது.அந்நாளில் கந்தன் கங்காணி என்பவர் பேர் போனவர். அவர்தான் அத்தோட்டத்தை பாதுகாத்து வந்தார். அவரின் பெயரிலேயே இன்றும் அவ்விடத்திற்கான பெயர் விளங்குகிறது. அவ்விடத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் என்ற பெயரில், தன் சொந்தப பணத்தில் [அதாவது வீராசாமி தோட்டத்தை அடகு வைத்த பணத்தில் ஒரு சிறு தொகையினை] ஆலயத்தை எழுப்பினார், துன் சம்பந்தன். அவ்வட்டாரத்தில் இன்றும் அக்கோவில் பிரபலமாக விளங்குகிறது.மற்ற ம.இ .கா. தலைவர்களை ஒப்பிடுகையில், அவர் ஒரு மாபெரும் மனிதர் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் .
நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தில் (FEDERAL CONSTITUTION , 183 ARTICLES) ஒரு இடத்தில கூட இந்தியன் அல்லது தமிழன் அல்லது சீனா என்ற வார்தக்க்கூட இடம்பெறாத ஒரு ஒப்பந்தத்தில் கையொப்ப மிட்ட்து சம்பந்தனும் தான் சென் லாக் கும். அதில் இடம் பெரும் இரண்டு வார்த்தைகள் யாதெனில் பூமி புத்ரா , இஸ்லாம். மற்றவர்களை குறிப்பிட புக்கான் பூமி புத்ரா என்றிருக்கிறது. இதுதான் சாதனையா ? கேள்வி கேட்டால் அவர் ஐஸ்க்ரீம் வாங்கி தந்தார், அல்வா வாங்கி தந்தார் என்பதா ?
துன் சம்பந்தன் அவரால் முடிந்ததை அவர் செய்தார். குறை சொல்ல முடியாது. ஆனால் வாய் சவடால் பேசி இந்த ஏழை தமிழன்களை ஏய்த்து , வாங்கிய பணத்தையும் , வந்த பணத்தையும் தன் வாய்க்கே போட்டுக்கொண்ட நம்ப சாதனை தலைவரை நினைக்கும்போது ,,,,,,,,,! துன் சம்பந்தனை கையெடுத்து கும்பிடலாம் ! ஐயா சிங்கம், பல ஆண்டுகளாக கோலா கங்சார் செல்லும் பொழுது கந்தான் சிற்றூரை கடந்துள்ளேன் ! ஆனால் “கந்தன் ” தான் இப்படி மருவியுள்ளார் என்பதனை உங்கள் பதிவை படித்துத்தான் தெரிந்துக்கொண்டேன் அய்யா ! நன்றி.
ஆனாலும் சாமி வேலுவை நம்மால் ஒன்னும் செய்ய முடிய வில்லையே …….
திலீப் 2, இப்போது உங்களுக்கு இருக்கும் தெளிவும், அறிவும் அப்போது அந்தத் தலைவர்களுக்கு இல்லை என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். உங்களை விட அவர்களின் கல்வி அறிவு மட்டம் தான். அது தான் இந்த அளவு தரம் தாழ்ந்து போய் விட்டார்கள். ஆனாலும் என்ன செய்வது? இப்போது கூட, நீங்கள் எல்லாம் இருந்தும் கூட, இவ்வளவு கல்வி வளர்ச்சி அடைந்தும் கூட ஐஸ்கிரீமும், அல்வாவும் கிடைத்துக் கொண்டு தானே இருக்கிறது!
en thaai thamizh…. (அவரின் சொந்த பணத்தில் எவ்வளவு என்று எனக்கு தெரியாது.) தெரியாம எப்படி மற்றவரை குறை சொல்கீறீர்கள்? அவர் வாழ்ந்த காலத்தில் அவரால் முடிந்ததை செய்து இருக்குறார். (நாம் யாரையும் குறை கூறலாம்–அது தவறாகாது– ஆண்டவனையே குறைகூறும் நாள்..) எந்த ஆண்டவனை ? இந்து ,இஸ்லாம் .கிறிஸ்டியன் . புத்த மதம் . இதில் எந்த ஆண்டவனை குறை கூற போறீங்க ? இல்ல நீங்க வணங்கும் உங்க ஆண்டவனயா? இந்து கடவுளை தவிர உங்காளால் மற்ற ஆண்டவனை கூற முடியுமா?(நம்முடைய இன்றைய இழி நிலை ஏன்?) நன்றாக யோசித்து பாருங்க பதில் கிடைக்கும்..
சுப்பு உங்க கட்சியில் சேர்ந்து முதல் தர உறுப்பினராக இருப்பதைவிட மற்ற கட்சிகளில் சேர்ந்து இரண்டாம் தர உறுப்பினராக இருப்பது எவ்வளவோ மேல்.
தேசிய முன்னணியே கூட்டணி கட்சிகளை இனவாரியாகத்தானே பார்க்கிறது. அப்படியிருக்கும்போது முதல் தர உறுப்பினர் இரண்டாம் தர உறுப்பினர் என்று பேசி மஇகா-வுக்கு சோத்துக்கு சு… ஊ… நிலை வந்து விடக்கூடாது என்பதற்காக என்னமாய் சாமாளிக்கிறை சுப்பு.
அவர் வாழ்ந்த காலத்தில் அவரால் முடிந்ததை செய்து இருக்குறார்…
உண்மைதான் அவர் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் மறக்காமல் இந்நாட்டு இந்தியர்களை நாம் வந்தேறிகள் என்பதையும் நினைவு படுத்தி கொண்டே இருந்தார்.
கடந்த காலத்தைப்பற்றியே குத்தியும் குடைந்தும் திட்டிக்கொண்டிருப்பதில் அர்த்தம் கிடையாது. இந்தியர்களின் நலனுக்காக அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்து ஆலோசனைகள் பிறப்பிப்பது ஓரளவு இந்தியர்களின் கண்களைத் திறக்க வழிவகுக்கும். இழந்தது போதும் அன்பர்களே!!! இல்லாமல் போகும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்!!!
(இந்நாட்டு இந்தியர்களை நாம் வந்தேறிகள் என்பதையும் நினைவு படுத்தி கொண்டே இருந்தார்.) இவர்தான் மலாய்காரங்களுக்கு சொல்லி கொடுத்தார் போல இருக்கு. எப்போது எந்த இடத்தில் என்பதை கூறினால் இங்குள்ள இந்தியர்களுக்கு உபயோகமாக இருக்கும் …
அந்த காலத்தில் இருந்து இன் நாட்டில் நாம் கேதுருனான் இந்தியா தானே ! கை தூக்கி குடியுரிமை பெரும் காலத்தில் கை கட்டி வாழ்ந்த தமிழனை என்ன வென்பது ! நாம் வந்தேறிகள் என்று மட்டும் அல்ல ! !! நாம் ஏழைகள் அனால் கோழைகள் அல்ல !! குருவிக்கும் கூடு உண்டு நமக்கென்று ஒரு வீடு இல்லை !! வாழ வழி இல்லை என்று மெட்ராஸ் திரும்பிய தமிழர்களை அவர் நிறுத்துவதற்கு பட்ட பாடு !! மக்களிடம் RM 10.00 வெள்ளி வாங்க பட்ட பாடு ! சம்பந்தன் உங்கள் பணத்தை கொள்ளை இடுகிறான் என்றும் ! எமாட்ரி விடுவான் என்றும் ! அண்ணா நாமம் பாடியவர்களும் !! ம இ கா வில் அவரின் எதிரிகளும் !! அந்த காலத்திலேயே தமிழனுக்கு தமிழன் தான் எதிரி ! !! பத்து வெள்ளி , பத்து வெள்ளி !! மாதம் மாதம் பத்து வெள்ளி !! என்று தோட்டம் ,தோட்டம் மாக பிரச்சார பாடல் பாடி, காண்ட கம்பில் அடிவாங்கிய அனுபவம் என் தந்தைக்கு ! தோட்டத்தை நம்பி வாழ்ந்த படிப்பறிவில்லாத தமிழனை அன்பால் வழி நடத்திய தலைவன் துன் சம்பந்தன் !!
அப்படி என்றால் ஐயா சாமியும் அவனால் முடிந்ததை செய்துள்ளான்- எனினும் நான் வாக்கு வாதம் புரிய விரும்ப வில்லை. அவர்கள்-குறிப்பாக சம்பந்தன் எவ்வளவோ செய்திருக்க முடியும் காரணம் வெள்ளையர்கள் நியாயத்துக்கு மதிப்பு கொடுப்பவர்கள்.
மக்களின் பங்கு பணம் எவ்வளவு என்று யாருக்காகவும் தெரியுமா? தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
கபாலி அவர்களே! வந்தேறிகள் என்று அவர் சொல்லாவிட்டாலும் ‘பர்மாவைப் பாருங்கள். அங்கு நடப்பது போல் இங்கு நடக்கவில்லை!” என்று அன்று அவர் அடிக்கடி சொல்லிவந்ததை நானும் வெறுத்திருக்கிறேன்! அப்போதும் அது நடக்கவில்லை! இப்போதும் அது நடக்கவில்லை! இப்போது நடப்பதெல்லாம் வெறுப்பு அரசியல். எல்லா உரிமைகளும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன! சீனர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை! நம் மீது அனைத்தையும் செய்ய முடிகிறது! சம்பந்தன் நமது உரிமைகளை அடகு வைக்கவில்லை ஆனால் இப்போதோ நமது தலைவர்கள் அனைத்தையும் அடகு வைத்துவிட்டார்கள்!
என் தாய் தமிழ், அவர்களுடைய சமீபத்திய ஆண்டறிக்கையைப் பாருங்கள். ஒரு வேளை நீங்கள் கேட்டவை கிடைக்கலாம். எனக்கு கிடைத்த ஆண்டு அறிக்கையைத் தூக்கி வீசி விட்டேன் நாம் ஒரு திருடர் சமூகத்தை வளர்த்து விட்டிருக்கிறோம். எல்லாத் துறைகளிலும் அவர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லுவதை நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும்! வேறு வழியில்லை! திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது! அதே போல திருட்டை ஒழிப்பது நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும்!
எனக்கு ஒன்று மட்டும் இங்கே பிடித்திருக்கிறது….. எல்லாரும் நன்றாக யோசிக்கிறீர்கள்….ஆனால் காலம்கடந்து யோசிக்கிறோம். எல்லாம் நம் தலை எழுத்து…1944 தோட்ட துண்டாடலுக்கு குரல் கொடுத்த வீரசேனன் மற்றும் கணபதியை நாம் மறந்தோம். பிறகு வந்த சம்பந்தனை நினைத்தோம். இதுதான் நிதர்சன உரிமை. இதில் இருந்து நாம் கட்டிட பாடம் யாதெனில், ஆதி வாங்கி பிறகுதான் நமக்கு ஞானம் வருகிறது. உலகமே அப்படி தான் இயங்குகிறது…. உலக இரண்டாம் போரில் அதிக உயிர்களை பலிகொடுத்த பின் தான் பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் ,மனித உரிமை ஆணையமும், மனித உரிமை தீர்பாயமும் ஏற்படுத்தினார்…. இன்று பிரான்சில் உள்ளது மனித உரிமை தீர்ப்பாயம் …..EUROPEAN COURT OF JUSTICE . இதுவே ஜனநாகய வழி. இப்பொழுது சிந்திக்கும் நேரம்….எனவே நல்ல ஒரு பாதையை, வழியை முன் வையுங்கள் நண்பர்களே ….