பெர்சத்து இனவாதக் கட்சி அல்ல- சைட் சாடிக்

syedபார்டி   பிரிபூமி  பெர்சத்து  மலேசியா( பெர்சத்து),  பூமிபுத்ராக்களை   உறுப்பினர்களாகக்  கொண்ட  ஒரு  கட்சி   என்றாலும்   அது   ஒரு “இனவாதக்  கட்சி”  அல்ல  என   அதன்  இடைக்கால  செயல்குழு  உறுப்பினர்    சைட்   சாடிக்     அப்துல்   ரஹ்மான்   கூறினார்.

“பங்சா   மலேசியா”  கோட்பாட்டுக்கு   ஆதரவாக  பேசிவந்தவர்     இனவாதக்   கட்சி   ஒன்றுடன்   தம்மை  இணைத்துக்  கொண்டதற்காகக்  கடுமையாகக்  குறைகூறப்பட்டதை   அடுத்து   அப்படி   ஒரு  விளக்கத்தை  சாடிக்   அளித்தார்.

“அது   முற்றிலும்   இன  அடிப்படையில்  அமைந்த  ஒரு  கட்சி   அல்ல.  அதில்  இணை  உறுப்பினர்  ஆகலாம்,   கட்சியின்  உயர்   பதவிகளுக்கும்  நியமிக்கப்படலாம்.   மற்ற  எதிர்க்  கட்சிகளுடனும்   அது   இணைந்து   பணியாற்றும்.

“அது   இணக்கத்தை  அடிப்படையாகக்   கொண்ட  கட்சி.  அம்னோவின்  கோட்டைகளாகக்  கருதப்படும்   பகுதிகளில்   போட்டியிடப்போகும்   சீர்திருத்தத்தை  மையமாகக்  கொண்ட   ஒரு  புதிய  பிரிபூமி  கட்சி”,  என   சாடிக்  டிவிட்டரில்   கூறியிருந்தார்.