பிஏசி 1எம்டிபி விவகாரத்தை மறுவிசாரணை செய்ய மறுப்பது ஏன்? பெர்காசாவுக்குப் புரியவில்லை

perkasaமலாய்  உரிமைகளுக்காக   போராடி  வரும்    பெர்காசா,     பொதுக்  கணக்குக்குழுத்    தலைவர்   ஹசான்  அரிப்பின்    1எம்டிபி   விவகாரத்தை    மறுவிசாரணைக்கு  எடுத்துக்கொள்ள  மறுப்பது  கண்டு  ஏமாற்றமடைந்துள்ளது.

“1எம்டிபி   விவகாரம்   குறித்து   பிஏசி   மீண்டும்  விசாரணை   செய்வது  அவசியம்  என  பெர்காசாவின்   ஊழல்-எதிர்ப்பு,  அதிகார  அத்துமீறல்  பிரிவு    நினைக்கிறது.    ஏனென்றால்    அக்குழுவின்   விசாரணை   முழுமை  அடையவில்லை.  அது     அவ்வூழலுடன்    அணுக்கமாக  தொடர்புள்ளவர்கள்     என்று   கூறப்படும்     தொழிலதிபர்   ஜோ  லோ-வையும்   திரைப்படத்   தயாரிப்பாளர்    ரிசா   அசீசையும்  விசாரணைக்கு    அழைக்கத்  தவறிவிட்டது.

“அமெரிக்க    அரசாங்கம்    அதன்   சட்டத்துறைத்   தலைவர்    லோரெட்டா    இ. லிஞ்ச்வழி    வெளியிட்டிருக்கும்    தகவல்களுக்கு  ஏற்ப   பிஏசி   அதன்  விசாரணையை  இற்றைப்படுத்திக்  கொள்ள   வேண்டும்”, என பெர்காசாவின்   ஊழல்-எதிர்ப்புப்   பிரிவுச்  செயலாளர்  முகம்மட்    பைய்ஸ்   நா’அமான்   ஓர் அறிக்கையில்   கூறினார்.