ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் மலேசியா முதலாவது பதக்கத்தை நேற்று வென்றது.
பெண்களுக்கான டைவிங் போட்டியில் மலேசியாவின் சியோங் ஜுன் ஹூங் , பெண்டெலெலா ரினோங் இணை மலேசியாவுக்கு முதல் பதக்கத்தை- வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளனர்.
10 மீட்டர் உயர மேடையிலிருந்து டைவ் அடிக்கும் போட்டியில் அவ்விருவரும் 344.34 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது நிலையை அடைந்தனர்.
அப்போட்டியில் சீனாவின் சென் ரவுலின், லியு ஹுயுக்சியா இணை 354 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. வெண்கலம் கனடாவுக்குச் சென்றது.


























தங்களை போன்றவர்களை மலேசியர்கள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். சோம்பேறிகளாக, மற்றவர்களை குறை சொல்லாமல், உங்கள் துறையில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்கிறீர்கள். வாழ்த்துக்கள் பெண்டெலெலா ரினோங், சியோங் ஜுன் ஹூங் !