பதக்கம் வென்ற பெண்டலெலாவும் ஜுன் ஹூங்கும் வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் பெறுவர்

olyரியோ  ஒலிம்பிக்   போட்டியில்   வெள்ளிப்  பதக்கம்   வென்ற   நீச்சல்  வீராங்கனைகள்    பெண்டெலெலா    ரினோங்,    சியோங்   ஜுன்  ஹூங்  ஆகிய    இருவரும்    அவர்களைப்   பாராட்டி  வழங்கப்படும்     ரிம600, 000 ரொக்கத்தைப்  பகிர்ந்து   கொள்வார்கள்   அத்துடன்   வாழ்நாள்  முழுக்க   ரிம3,000  ஓய்வூதியமும்   பெறுவார்கள்.

தேசிய  விளையாட்டுகள்  மன்றம்,  ஒலிம்பிக்   போட்டியில்   வெற்றி  பெறுவோரை    ஊக்குவிப்பதற்கென்றே   ஒரு   திட்டம்   வைத்துள்ளது.   அத்திட்டத்தின்கீழ்   தங்கப்   பதக்கம்    பெறுவோருக்கு   ரிம1மில்லியன்   ரொக்கம்   வழங்கப்படுவதுடன்    மாத  ஓய்வூதியமாக   ஐயாயிரம்  ரிங்கிட்டும்   வழங்கப்படும்.  வெள்ளிப்  பதக்கத்துக்கு    ரிம600,000   ரொக்கப்  பரிசு,   ரிம3,000  வாழ்நாள்  ஓய்வூதியம்.  வெண்கலத்துக்கு   ரிம100,000  ரொக்கம்,  ரிம2,000  ஓய்வூதியம்.

10 மீட்டர் உயர மேடையிலிருந்து டைவ்   அடிக்கும்    போட்டியில்   அவ்விருவரும்   344.34   புள்ளிகளைப்   பெற்று    மலேசியாவுக்கு    வெள்ளிப்  பதக்கத்தைப்  பெற்றுத்   தந்தனர்.

பெண்டெலெலா    ஒலிம்பிக்   போட்டியில்   மலேசியாவுக்குப்   பதக்கம்  பெற்றுத்  தந்த   முதலாவது    பெண்ணாவார்   என்பது    குறிப்பிடத்தக்கது.  2012  லண்டன்  ஒலிம்பிக்  போட்டியில்   10மீட்டர்  உயரத்திலிருந்து    டைவ்   அடிக்கும்   போட்டியில்   அவர்   வெண்கலம்   வென்றார்.