புதிய கட்சி காலூன்றுமுன் திடீர் தேர்தல்: மூசா ஹித்தாம் ஆருடம்

musaபிஎன்   “விரைவில்”  திடீர்  தேர்தலை   நடத்தும்  என்கிறார்   முன்னாள்  துணைப்  பிரதமர்   மூசா  ஹித்தாம்.  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  பார்டி   பிரிபூமி  பெர்சத்து (பெர்சத்து)  வலுவாகக்  காலூன்றுவதற்குள்    அது   நடத்தப்படலாம்   என்பது   அவரது  கணிப்பு.

“பிஎன்   விரைவில்   தேர்தலை   நடத்தும்  என்றுதான்  நினைக்கிறேன்.

“அப்படி   நடக்குமானால்   அரசாங்கத்துக்கு  எதிராக  ஒன்றிணைந்து  ஒரு  வலுவான   சக்தியாக  உருவெடுப்பதுதான்    எதிரணிக்குப்   பெரும்  சவாலாக   இருக்கும்”,  என  மூசா   இன்று  கோலாலும்பூரில்   “Frankly Speaking”  என்ற   அவரது  நூல்    வெளியீட்டுக்குப்    பின்னர்    செய்தியாளர்களிடம்    கூறினார்.

மகாதிர்  பிரதமருக்குத்  துணைப் பிரதமராக   இருந்த   மூசா,    தொகுதி   ஒதுக்கீடு    அவர்களுக்கு    இன்னொரு   பிரச்னையாகும்    என்றார்.

“தேர்தலில்   வெற்றிபெற   அவர்கள்   தொகுதி    ஒதுக்கீட்டில்    ஒத்தகருத்தைக்   கொண்டிருப்பது    அவசியம்.  கடந்த  காலங்களில்   பெரும்பாலும்   அது    இருந்ததில்லை”,என்று   அம்னோவின்   முன்னாள்   தலைவருமான   மூசா    கூறினார்.