மகாதிர் இன்னும் ஐஜேஎன்னில் சிகிட்சை பெற்றுவருகிறார்

 

mahநேற்றிரவு கோலாலம்பூர் தேசிய இருதயக் கழகத்தில் (ஐஜேஎன்) மார்பில் ஏற்பட்டிருக்கும் உபாதைக்கு சிகிட்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்னும் தொடர்ந்து சிகிட்சை பெற்றுவருகிறார்.

அவரது உடல்நலம் பழைய நிலைக்கு திரும்பும் வரையில் இன்னும் சில தினங்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பார் என்று ஐஜேஎன் பேச்சாளர் தெரிவித்தார்.

மகாதிரின் குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு எவரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக 1989 லும் பின்னர் 2007 லும் மகாதிருக்கு இருதய அறுவைச் சிகிட்சை செய்யப்பட்டுள்ளது.