மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம்(பினாஸ்), மலேசிய திரைப்பட விருதளிப்பு விழாவில் சிறந்த படப்பிரிவுக்கான போட்டியை எல்லாப் படங்களுக்கும் திறந்து விடும் என அதன் தலைமை இயக்குனர் கமில் ஒத்மான் கூறினார்.
அப் போட்டியை எல்லாப் படங்களுக்கும் திறந்து விடுவதென்ற முடிவை எடுத்தது தொடர்பு, பல்லூடக அமைச்சு. நேற்று அமைச்சின் அம்முடிவை அறிவித்த அமைச்சர் சாலே சைட் கெருவாக், திரைப்பட விழாவில் தேசிய மொழிப் படங்களுக்கென தனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“அம்முடிவின்படி நடந்து கொள்வோம்”, என்று கூறிய கமில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று நடைபெறும் பினாஸ் வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

























