நில பொதுப் போக்குவரத்து ஆணையம்(ஸ்பாட்) ஆண்டு இறுதிக்குள் ஊபர், Grab car சேவைகளை முறைப்படுத்தி அவற்றைச் சட்டப்பூர்வமாக வழிகாண வேண்டும் என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
மலேசியர்களின் நன்மைக்காக இதைச் செய்ய வேண்டியது அவசியம் என அமைச்சரவை நினைப்பதாக த சன் டெய்லி கூறியது.
சவாரி-பகிர்வுக்கு இடமளிக்கும் சட்டத் திருத்தங்கள் நவம்பர் மாத நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்சிகளுக்கு தனித்தனியே டெக்சி உரிமம் கொடுக்கப்படுவதையும் அமைச்சரவை வரவேற்கிறது. ஆனால், டெக்சிகள்மீது குற்றப்பதிவு எதுவும் இருத்தல் ஆகாது.

























