இந்து மாணவர்களின் எதிர்ப்பை அடுத்து யுஎஸ்எம் பட்டமளிப்பு நாள் மாற்றப்பட்டது

usmயுனிவர்சிடி   சயின்ஸ்  மலேசியா  வேந்தர்,  பெர்லிஸ்   ராஜா,    துவாங்கு  சைட்   சிராஜுதின்   புத்ரா   ஜமாலுல்லாயிலின்   ஒப்புதலுடன்   அப்பல்கலைக்கழகத்தின்  54வது    பட்டமளிப்பு   விழா   அக்டோபர்   24–இலிருந்து  அக்டோபர்  27-வரை  நடக்கும்.

முதலில்   அதை    அக்டோபர்  24  தொடங்கி  அக்டோபர்   28 (தீபாவளிக்கு   முதல்நாள்) வரை  நடத்தத்   திட்டமிடப்பட்டிருந்தது .  யுஎஸ்எம்   இந்து    மாணவர்கள்   முறையிட்டதை   அடுத்து    தேதியில்  மாற்றம்   செய்யப்பட்டது.

“இதற்கு   யுஎஸ்எம்  வேந்தர்  இசைவு   தெரிவித்துள்ளார்…..எந்தெந்த  நாள்களில்  என்னென்ன  பட்டங்கள்   அளிக்கப்படும்   என்ற விவரம்  பின்னர்    அறிவிக்கப்படும்”,  என  யுஎஸ்எம்    அதன்  அகப்பக்கத்தில்   அறிவித்தது.

இந்தப்  பட்டமளிப்பு   விழாவில்  மொத்தம்   6330  பட்டதாரிகள்   பட்டம்  பெறுகிறார்கள்.