பெர்லிஸ் முப்தி அஸ்ரி சைனல் அபிடின், போக்கிமோன் கோ விளையாட்டுக்கு இஸ்லாத்தில் இடமுண்டா இல்லையா என்பதுமீது விடாமல் தொடரும் விவாதங்களைக் கண்டித்தார்.
“என்னைக் கேட்டால் போக்கிமோன் கோ உள்பட, உங்களுக்கும் சமுதாயத்துக்கும் ஆபத்தை உண்டாக்கக்கூடிய எந்த விளையாட்டிலும் ஈடுபடாதீர்கள் என்றுதான் வலியுறுத்துவேன்.
“அந்த விளையாட்டில் முழுமையாக ஈடுபட்டு நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மறந்து விடக்கூடாது. போக்கிமோன் கோவுக்கு அனுமதியுண்டா என்று விவாதத்தில் ஈடுபட்டு நம்மைச் சுற்றியுள்ள அதைவிட போசமான ஆபத்துகளை மறந்து விடக் கூடாது.
“பொது இடங்களில் புகைக்கும் ஒருவர் போக்கிமோன் கோ-வின் அபாயங்கள் பற்றிப் பேசுவது வினோதமாகப் படுகிறது. பொதுச் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துவோர்கூட இதைப் பற்றிப் பேசுகிறார்கள் அதே வேளை கையாடல்களும் நிர்வாக முறைகேடுகளும் நாட்டைச் சீரழிப்பதை மறந்து விடுகிறார்கள்.
“இதைப் பற்றிக் கருத்துரைப்பதைத் தவிர்க்கத்தான் முயன்றேன் ஆனால், சமய அறிஞர்கள் உள்பட, பலரும் இதைப் பற்றிப் பேசும் அளவுக்கு இது மகா பெரிய விளையாட்டாக தெரிகிறது.
“ஒருவர் தனக்கோ சமுதாயத்துக்கோ தீமை செய்யக்கூடிய எந்த வீணான செயலிலும் ஈடுபடுவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் இப்படிப்பட்ட செயல்களூக்குக் குறைவே இல்லை”, என்றாரவர்.
இவர் சமயவாதிதான் ! மறுப்பதற்கில்லை ! ஆனாலும் சமூக நலன் மீதும் அக்கரை கொண்டுள்ளார். வரவேற்க கூடிய ஒன்று.
பெர்லிஸ் மாநிலத்தில் ஊழல் HALALலாகவும் போக்கிமோன் கோ HARAMமாகவும் பிரகடனம் செய்ய பரிந்துரை செய்யலாமே