சுபாங்கில் ஜாலோர் கெமிலாங் பறக்கவிடாத வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

jalurமெர்டேகா  மாதத்தில்    மலேசியக்  கொடியைப்   பறக்கவிடும்   போக்கு  குறைந்து   கொண்டு   வருகிறது.  இதைக்  கண்ட    அரசியல்வாதிகள்  மலேசியர்கள்  நாட்டுப்பற்றில்லாமல்   இருப்பதாகக்  கடிந்து  கொண்டிருக்கிறார்கள்.

இதற்குத்   தீர்வாக   சுபாங்   ஜெயா   முனிசிபல்   மன்றம்(எம்பிஎஸ்ஜே)  ஒரு  புதிய  விதிமுறையைக்  கொண்டுவர   முடிவு   செய்துள்ளது.

எம்பிஎஸ்ஜே   அதன்   எல்லைக்குள்  இருக்கும்  தொழில்  நிறுவனங்கள்   ஆகஸ்ட்  15-இலிருந்து   செப்டம்பர்  16வரை   ஜாலோர்  கெமிலாங்  பறக்கவிடுவதைக்  கட்டாயமாக்கும்    என   ஸ்டார்  ஆன்லைன்   கூறியது. அந்த  விதிமுறை   அடுத்த  ஆண்டில்  அமலுக்கு  வருமாம்.

வர்த்தகங்களுக்கு  உரிமம்   வழங்குகையில்  இந்த  விதிமுறையையும்   சேர்த்துக்  கொள்ள   மன்றம்  முடிவு  செய்துள்ளது.

“குறிப்பிட்ட   காலத்துக்கு   தேசியக்  கொடியைப்  பறக்கவிட   தவறினால்   ரிம1,000  அபராதம்   விதிக்கப்படும்”,  என  எம்பிஎஸ்ஜே   தலைவர்   நோர்  ஹிஷாம்  அஹ்மட்  டஹ்லான்   கூறினார்.