முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அடுத்த பெர்சே 5 பேரணியில் பேச அனுமதிக்கப்படுவார் ஆனால், சில நிபந்தனைகள் உண்டு என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கூறுகிறார்.
“எங்களின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். எங்கள் மேடையில் பேசும் எவரும் நிறுவனபூர்வமான மாற்றங்கள் தேவை என்பதையும் தேர்தல்கள் சுத்தமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ”, என்று மரினா மலேசியாகினிக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் கூறினார்.
“இதற்கு ஒப்புக்கொள்ளும் ஒருவர் எங்களுடன் சேரலாம். எங்களுக்கு ஆதரவாக செயல்படலாம். இதுதான் எங்களின் நிலைப்பாடாக எப்போதும் இருந்து வந்துள்ளது”, என்றார்.
மகாதிர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகக் கோரி தயாரித்த குடிமக்கள் பிரகடனத்தில் பெர்சேயின் சீரமைப்பு கோரிக்கைகளையும் இணைத்துக்கொள்ள இணக்கம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதி காண்பது அரிது என்பது இந்த அரசாங்கத்தை பொறுத்தமட்டில் உண்மைதான் போலிருக்கிறது!!!
நீங்கள் அமைதியாக பெர்சிஹ் 20.0 செய்யும் வரை கூட இந்த கொ.., கொ.. செய்தவன் ஆட்சியில் இருப்பான் ஒரே தீர்வு, இவனை பதவியில் இருந்து இறங்கும் வரை தொடர் போராட்டம் ஒன்றே !!! அந்த போராட்டத்தில் சிலர் இவனுடைய அடியாட்களால் கொல்லப்படலாம் ! தயாரா ?