1எம்டிபி-இலிருந்து யுஎஸ்$3.5பில்லியன் “திருடப்பட்ட”தாக அமெரிக்க நீதித்துறை கூறியுள்ள போதிலும் அந்நிறுவனம்மீது மீண்டும் விசாரணையைத் தொடங்கப்போவதில்லை என பேங்க் நெகாரா அறிவித்துள்ளது.
1எம்டிபிக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எல்லாம் மத்திய வங்கி ஏற்கனவே எடுத்தாயிற்று என பேங்க் நெகரா ஆளுனர் முகம்மட் இப்ராகிம் இன்று தெரிவித்தார்.
“1எம்டிபி மீது எங்கள் விசாரணை முடிந்து விட்டது.
“அந்த நிறுவனத்துக்கும் அபராதம் விதித்தோம். சட்டப்படி தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுத்து விசாரணையை முடித்தாயிற்று”, என முகம்மட் இன்று கோலாலும்பூரில் கூறினார்.
ஆனால், எந்த விசாரணை அமைப்பாவது 1எம்டிபிமீது விசாரணை நடத்தினால் பேங்க் நெகரா அதனுடன் ஒத்துழைக்கும்.
என்ன முடிந்து விட்டது?? மக்கள் வரிப்பணம் வெளியானது என்னவானது?? கோடிக்கணக்கில் தனி நபரின் வங்கிக் கணக்கில் பதிவான பணம் என்னவானது?? பதவி கிடைத்ததும் பொதிமாடுபோல் தலையாட்டும் அறிவிலித்தனம் இந்நாட்டு அரசியலில் புதிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே!!!
திருடனின் கூட்டில் வேறு யார் இருக்க முடியும்?
இதை நீங்கள் சொல்வீர்கள் என்று தெரிந்து போன ஒன்று. நாட்டின் நாணய மதிப்பு படு வீழ்ச்சி,பொருளாதாரம் பாதிப்பு ஆகிய உங்களுக்கு கவலை இல்லாத ஒன்று.
சமீபத்தில் நேப்பாள தேசிய வங்கியின் கணக்குப்படி மலேசியாவில் வேலை செய்யும் நேப்பாள தொழிலாளர்கள் வருடத்திற்கு 5 மில்லியன் மலேசிய வெள்ளியை தங்கள் நாட்டுக்கு ஆனுப்புகிறார்கள் என்று தெரிவிக்கிறது. அந்த வங்கியின் கூற்றுப்படி பார்த்தால் நேப்பாளிகள் , இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், வங்காளதேசிகள், இந்தோனேசியர்கள், மியன்மார் மற்றும் கணக்கில்லா லட்சக்கணக்கான கள்ளக்குடியேறிகள் மூலம் தினமும் லட்சக்கணக்கான நமது நாணயம் கொள்ளை போகிறது என்றால் நாட்டை ஆளுபவர்களும் போட்டி போட்டு கொண்டு அவர்களுக்கு நிகராக மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் நமது நாடு திவாலானாலும் ஆச்சர்யம் இல்லை.
இதில் இந்தியர் சொத்து எதுவும் இருக்காது .. நாம் கவலை பட எதுவும் இல்லை . ஒரு சிறு திருத்தம் , அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை , கஷ்டபட்டு வேலை செய்து பணத்தை அனுப்புறாங்க .. நாம் நமக்குள் அடித்து கொள்ள நிறைய இருக்கு .. நாடு திவால் ஆனா நமக்கு என்ன ?
எவனாவது மூனு மாசம் வீட்டுக் கடன் கட்டலையா…கார் கடன் கட்டலையா அவன் மேல் நடவடிக்கை எடுங்கள், வீட்டி ஏலம் போடுங்கள். காரை தாரே பண்ணுங்கள். இப்படி கோடி கோடியாக கொள்ளையடிக்கும் வல்லவர்களை விட்டு விடுங்கள்..