துணைப் பிரதமரின் மருமகனுக்கு மரணம் விளைவித்ததாக மருத்துவ நிபுணர்மீது குற்றச்சாட்டு

gynaeபங்சார்    பல்மருத்துவ  மருத்துவகத்தைச்  சேர்ந்த   36வயது   மருத்துவ   நிபுணர்   ஒருவர்மீது    துணைப்  பிரதமர்   அஹ்மட்  ஜாஹிட்   ஹமிடியின்  மருமகனார்   சைட்  அல்மான்   ஜைன்    சைட்   அலிக்கு   மரணம்  விளைவித்ததாக   இன்று    கோலாலும்பூர்  செஷன்ஸ்   நீதிமன்றத்தில்   குற்றஞ்சாட்டப்பது.

திட்டமிடப்படாத   கொலைகுற்றம்   சாட்டப்பட்ட    டாக்டர்    திங்  டெக்  சின்  குற்றத்தை  மறுத்து  விசாரணை   கோரியுள்ளார்.

குற்றவாளி   என  நிறுவப்பட்டால்   திங்குக்குக்  கூடின  பட்சம்  10  ஆண்டு  சிறைத்  தண்டனை  விதிக்கப்படலாம்.

அவர்   பங்சார்,   ஜாலான்   தெலாவியில்  உள்ள  இம்பீரியல்   டெண்டல்   கிளினிக்கில் ,  ஜூன்    முதல்  நாள்   மாலை   மணி  6க்கும்   இரவு   9.05க்குமிடையில்   சைட்  அல்மானுக்கு   மரணம்  விளைவித்தார்   எனக்  குற்றம்    சாட்டப்பட்டுள்ளது.