பெர்சே தலைவர் மரியா சின் மலேசியாவில் பேரணி நடத்தி “அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது” என்கிறர்.
இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து போன்ற அண்டைநாடுகளில் பெருமளவில் மக்கள் எழுச்சி ஏற்பட்டு சர்வாதிகார ஆட்சிகள் கவிழ்ந்ததுபோல் மலேசியாவில் நடக்க வாய்ப்பில்லை என்றாரவர்.
“மற்ற நாடுகளில் அது(ஆர்ப்பாட்டங்களால் அரசுகளின் மாற்றம்) நடக்கலாம். மலேசியாவில் இன்னும் நாம் அந்தக் கட்டத்துக்கு வரவில்லை.
“அது எல்லாருக்கும் ஒரே மாதிரியான (மாற்றம் வேண்டும் என்ற) எண்ணம் வந்தால் மட்டுமே நடக்கும். இப்போதைக்கு அது இல்லை”, என்று கூறியவர் மலேசியர்களில் பெரும்பாலோர் தேர்தல் விதிமுறைகள் நியாயமாக இல்லை என்றாலும்கூட தேர்தல் மூலமாக மாற்றத்தைக் கொண்டு வருவதைத்தான் விரும்புகிறார்கள் என்றார்.
மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் மரியா இவ்வாறு கூறினார்.