பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தாம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் என்றும் கருத்திணக்கத்தின் அடிப்படையிலேயே அரசாங்க முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் வலியுறுத்தினார்.
“நான் தனிமனித ஆட்சி நடத்தவில்லை, நான் சர்வாதிகாரி அல்ல”, என இன்று மலாக்கா, தங்கா பத்து அம்னோ தொகுதிக் கூட்டத்தைத் தொடக்கிவைத்தபோது நஜிப் கூறினார்.
அதை விளக்குவதற்கு ஒரு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார். ஒரு வளைந்த பாலம் கட்டுமாறு குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து நெருக்குதல் வந்தது என்றும் அவிவகாரத்தைத் தாம் அம்னோ உச்ச மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதாகவும் அங்கே அது ஒருமுகமாக நிராகரிக்கப்பட்டதாகவும் நஜிப் குறிப்பிட்டார்.
அவர் பெயரைச் சொல்லாவிட்டாலும் அவர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைத்தான் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு.
உண்மைதான் நீங்கள் சர்வாதிகாரி இருந்திருந்தால் சிடேக் மூலமாக இந்திய அமைப்புகளுக்கு பணத்தை வாரி கொடுக்க முடியுமா…?
சர்வாதிகாரி இல்லை ஆனால் பொய்க்கார தில்லுமுல்லு ……
நீங்கள் சர்வாதிகாரி அல்ல! அப்படி இருந்திருந்தால் எங்களுக்கெல்லாம் சடைவாரி பூச்சூடி இருப்பீர்களா!