1எம்டிபியுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும் நாணயச் சலவை சாத்தியம் பற்றிய நடவடிக்கைகள் குறித்து பேங்க் நெகாரா விசாரணையை மீண்டும் தொடங்கவில்லை என்றால் பேங்க் நெகாரா மற்றும் அதன் புதிய கவர்னரின் நம்பகத்தன்மைக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1எம்டிக்கு எதிராக வெறும் நிருவாகம் சம்பந்தப்பட்ட தண்டணை விதிப்பதின் மூலம் பேங்க் நெகாரா அனைத்துலக ஏளனத்திற்கு உட்படுத்தப்படும் ஆபத்தில் இருக்கிறது என்றாரவர்.
அமெரிக்க நீதித்துறை 1எம்டிபியின் மற்றும் மலேசிய அதிகாரிகளும் இரகசியமாகச் சதி செய்து யுஎஸ்$3.5 பில்லியனுக்கும் அதிகமானத் தொகையை கையாடியுள்ளனர் என்று கூறியிருப்பதை புவா சுட்டிக்காட்டினார்.
நேற்று, பேங்க் நெகாரா கவர்னர் முகமட் இப்ராகிம் 1எம்டிபி குறித்து எந்த விசாரணையும் மீண்டும் மேற்கொள்ளப்படாது என்றும் அந்த அரசு முதலீட்டு நிதிக்கு எதிராக தேவையான நடவடிக்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு விட்டன என்/று கூறியிருந்தார்.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக பேங்க் நெகாரா கட்டிக்காத்து வந்த அதன் நம்பகத்தன்மையை இந்த ஓர் அறிவிப்பு ஒரே நொடியில் பாழடித்து விட்டது என்று புவா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
எந்த காலத்தில் புவா இந்த நாதரிகள் நம்பகமானவர்களாக இருந்தனர்? எல்லாருமே அடிவருடிகள் தானே. ஒன்றும் நடக்காது.
அனைத்துலக ஏளனமா? அதைப்பார்த்தால் பதவி என்ன ஆவது?