தமது மிக அண்மைய நூலில் (Frankly Speaking) கூறப்பட்டிருக்கும் பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான மூன்று திட்டங்கள் அவரது சொந்த திட்டங்கள் அல்ல என்று மூசா ஹீத்தாம் கூறுகிறார்.
அஸ்ட்ரோ அவானி கூற்றுப்படி, மற்றவர்கள் கூறியதைத்தான் தாம் வெளியிட்டதாக மூசா கூறியுள்ளார்.
மூசா அவரது நூலில் நஜிப்பை வெளியேற்றுவதற்கு மூன்று வழிகளைப் பட்டியலிட்டிருந்தார். அவற்றில் ஒன்று, அம்னோ வழியாக, இரண்டு, வெளிநாட்டு தலையீடு அல்லது மூன்று, பொதுத் தேர்தல்.
அந்தப் பட்டியலில் குறிப்பிட்டிருப்பது தமது சொந்த கருத்தல்ல. மற்றவர்கள் கூறியவற்றை பட்டியலிட்டதாக கூறிய மூசா, அவற்றை கூறியவர்கள் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை.
அவை தம்முடைய கருத்துகள்தான் என்று சிலர் கூறியிருப்பதற்கு காரணம் அவர்களின் ஆங்கில மொழி புலமை வளமில்லாததாக இருப்பதுதான் என்று மூசா ஹீத்தம் மேலும் கூறினார்.
என்ன தான் சொல்லுங்கள்! உங்களைக் கேட்டிருந்தால் 30 வழிகளை கூட சொல்லியிருப்பிர்கள்! ஆனால் யாரும் உங்களை கேட்கவில்லையே!