சரணடையுங்கள் அல்லது கைது செய்யப்படுவீர், புதிய எம்எசிசி தலைவர் எச்சரிக்கை

 

Newmmacchiefஊழல் நடவடிக்கைகளையும் அதிகார அத்துமீறல்களையும் நிறுத்துங்கள் அல்லது எம்எசிசியின் கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவர் சுல்கிப்ளி அஹமட் எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஊழல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் தாமாகவே உடனடியாக சரணடைய வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டணை விதிக்கப்படும்.

இவ்வேண்டுகோளை விடுக்கையில் சுல்கிப்ளி சாந்தமாக காணப்பட்டாலும், அவரது தொனியில் காணப்பட்ட உறுதிப்பாடு தெளிவாக இருந்தது.

எம்எசிசியின் முன்னாள் தலைவர் அபு காசிம் முகமட்டிடமிருந்து ஆகஸ்ட் 1 இல் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட சுல்கிப்ளி தாம் அதிகமாக பேசுவதில்லை. ஆகவே, ஊழல்களில் ஈடுபட்டிருப்பவர்கள் அவற்றை உடனே நிறுத்த வேண்டும் என்றாரவர்.

இந்த எச்சரிக்கை வெறும் வெத்துவேட்டு அல்ல என்று கூறிய அவர், சட்டத்திற்கு புறம்பாக வருமானம் பெறுவதை “தயவு செய்து நிறுத்துங்கள்” என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.