லுகாஸ் ஆசிர்வாதம், வயது 65, கடந்த 11 ஆம் தேதி அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டுருக்கும் போது சுடப்பட்டார். அவரது 4 ஏக்கர் தோட்டம் பேராக், சிபோரில் இருக்கிறது.
ஈப்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லுகாஸை டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரனும் பெர்சாம் சட்டமன்ற உறுப்பினர் சியோங் சீ கிங்கும் ஈப்போ மருத்துமனைக்கு சென்று கண்டனர்.
இந்த விவகாரம் குறித்து சுயேட்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த குலாவும் சியோங்கும் லுகாஸை சுட்டவர் ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரி என்று தெரிவித்தனர்.
தாம் சுட்டது ஒரு காட்டுக் குரங்கு என்று அந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி நினைத்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. மிகுந்த விளக்கமும் ஆழ்ந்த விசாரணையும் தேவைப்படுகிறது என்று குலா மேலும் கூறினார்.
சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி இன்னும் தடுத்து வைக்கப்படவில்லை என்பதையும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் ஈப்போ போலீஸ் உறுதிப்படுத்தினால் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
லூகாஸுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதை உறுதி செய்வதற்காக டிஎபி அவருக்கு தேவைப்படும் சட்ட உதவியை எவ்வித தயவும் தாட்சணையுமின்றி வழங்கும் என்று குலா உறுதியாகக் கூறினார்
அவர் ஏறியது பலா மரம். தென்னை மரம் போல பலா மரம் உயரமானது அல்ல. மனிதனுக்கும் காட்டுக் குரங்குக்கும் வித்தியாசம் தெரியாத காட்டானா இவன்? ஒரு வேளை லுக்காஸை இவன் காட்டுக் குரங்கு என்று குறிப்பிடுகின்றானா? இவன் துப்பாக்கியை இன்னும் பிடுங்காதது ஏன்? ஒருவேளை இவன் அந்த கும்பலைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம்..நாட்டில் பாதுகாப்பு முறை சரியில்லை. இனி கடைத் தெருவுக்கு செல்வோர்கூட துப்பாக்கியுடன் தான் செல்ல வேண்டுமோ?
orang utan க்கு காட்டுகுரகுக்கும் மனிதனுக்கும் எப்படி வித்தியாசம் தெரியாமல் போனது ?
மனிதனுக்கும் காட்டுக்குரங்குக்கும் வித்தியாசம் தெரியாதவருக்கெல்லாம் கையிலே துப்பாக்கி! இவர் என்ன குரங்குகளைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறா?