ஊபர் கிரேப் கார் சேவைகள் சட்டப்பூர்வமாக்கப்படுவதற்குப் பயனீட்டார் அமைப்பு வரவேற்பு

uberஆண்டு    இறுதிக்குள்    ஊபர்,  கிரேப்   கார்  சேவைகளை  முறைப்படுத்தி   அங்கீகரிக்கும்  அமைச்சரவை  முடிவை   பினாங்கு   பயனீட்டாளர்   பாதுகாப்புச்  சங்கம்    பாராட்டியுள்ளது.

சவாரி-பகிர்வுக்கு    இடமளிக்க     அது    தொடர்பான   சட்டங்களில்   திருத்தங்கள்   செய்யப்படும்   என    அறிவிக்கப்பட்டிருப்பதை    அச்சங்கத்தின்    தலைவர்   கே.கோரிஸ்  அடான்   வரவேற்றார்.

ஊபர்,  கிரேப்   கார்  சேவைகள்   அங்கீகரிப்படுவதால்    நாட்டில்   இப்போதுள்ள   70,000  ஆகவுள்ள   டெக்சிசிகளின்    எண்ணிக்கை  150,000  ஆக உயரும்.

இது  டெக்சி   ஓட்டுனரிடையே   “அருமையான  போட்டிக்கு    வழிகோலும்”   என  கோரிஸ்    தெரிவித்தார்.

“இது  மலேசியர்களுக்கு   மிகவும்   மகிழ்ச்சி   அளிக்கிறது.   ஊபர்,   கிராப்    கார்   சேவையைப்   பயன்படுத்துவோர்   புகார்   செய்வதில்லை.  ஏனென்றால்   அந்த   ஓட்டுனர்கள்   தொழிலில்  நிபுணத்துவம்  உடையவர்களாக,   படித்தவர்களாக,    கண்ணியமிக்கவர்களாக  இருக்கிறார்கள்.  டெக்சி   ஓட்டுனர்கள்   அவர்களிடமிருந்து   நிறைய   கற்றுக்கொள்ளலாம்”,  என்றவர்   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.